“நம்ம ஊரு நம்ம கெத்து” – டிஎன்பிஎல் 2023 இல் விளையாட இருக்கும் ஐபிஎல் 2023ல் கலக்கிய 12 நட்சத்திர வீரர்களின் பட்டியல்!

0
3481

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று முதல் துவங்க இருக்கிறது . தமிழ்நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது .

டி20 வடிவில் நடத்தப்படும் இந்த தொடரின் ஏழாவது சீசன் இன்று ஆரம்பமாகிறது . மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெறும் இந்தப் போட்டி தொடர் தமிழகத்தில் கோயம்புத்தூர் சேலம் திருநெல்வேலி திண்டுக்கல் ஆகிய நான்கு இடங்களில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டி தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 12ஆம் தேதி திருநெல்வேலியில் வைத்து நடைபெற உள்ளது .

- Advertisement -

தமிழகத்தைச் சார்ந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் முதல் புதுமுக வீரர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரானது விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருப்பதோடு வீரர்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது .

தற்போது தமிழக அணிக்காகவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பை அளித்த சாய் சுதர்சன் மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய நடராஜன் உள்ளிட்டோர் தமிழ்நாடு பிரிமியர் லீக் மூலமாக அறிமுகமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது . குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஜெகதீசன் வருண் சக்கரவர்த்தி பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஷாருக் கான் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கினார் .

- Advertisement -

இவர்கள் நடைபெற இருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதால் தமிழக ரசிகர்கள் இந்த போட்டி தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் . குறிப்பாக இந்தத் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் எட்டு போட்டிகளில் 362 ரன்களை குவித்திருந்தார் இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும் . அதிலும் இறுதிப்போட்டியில் அவர் அடித்த 96 ரன்கள் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும் . இவரை தவிர குஜராத் அணிக்காக விளையாடிய மற்றொரு தமிழக வீரர் ஆன விஜய் சங்கர் 14 போட்டிகளில் 301 ரன்கள் உடன் மூன்று அரை சதங்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . இவர்களை தவிர ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் 12 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களையும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வருமான ரவிச்சந்திரன் அஸ்வின் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தைச் சார்ந்த 12 நட்சத்திரங்கள் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் எந்த அணிக்காக விளையாடுகிறார்கள் என பார்ப்போம் .

ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி – திண்டுக்கல் டிராகன்ஸ்

விஜய் சங்கர், சாய் கிஷோர் – திருப்பூர் தமிழன்

சாய் சுதர்சன், ஷாருக்கான் – லைக்கா கோவை கிங்ஸ்

வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் – மதுரை பேன்தர்ஸ்

சந்திப் வாரியர், சோனு யாதவ் – நெல்லை ராயல் கிங்ஸ்

நாராயண் ஜெகதீசன் – சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

டி.நடராஜன் – திருச்சி