விராட் கோலி முதல் பால் இப்படித்தான் ஆடுவான்; சிஎஸ்கே ட்ரெஸ்ஸிங் ரூமில் கோலியை வர்ணித்த தோனி – வீடியோ உள்ளே!

0
1119

ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி முதல் பந்தை எப்படி எதிர்கொள்வார் என்று சிஎஸ்கே டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து பேசியுள்ளார் தோனி இதன் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தட்டுத்தடுமாறி 139 ரன்கள் மட்டுமே அடித்தது.

- Advertisement -

இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து 7 விக்கெட் உள்ள வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது.

சனிக்கிழமை இந்த போட்டி முடிவற்றவுடன் டெல்லி மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து கண்டு களித்துள்ளனர்.

அப்போது ஒவ்வொரு போட்டியிலும் விராட் கோலி தனது முதல் பந்தை எப்படி எதிர்கொள்வார் என்பது பற்றி அருகில் இருந்த வீரரிடம் விளக்கியுள்ளார் தோனி. அவர் கூறியதாவது, “விராட் கோலி எப்போதும் தனது முதல் பந்தை இந்த இடத்தில் தான் எதிர்கொள்வார். இப்படி செய்ய மாட்டார்.” என்றார்.

- Advertisement -

இந்த நிகழ்வை பதிவு செய்த சக சிஎஸ்கே அணி வீரர் ராஜ்வர்தான் ஹங்ரேக்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தோனி மற்றும் விராட் கோலி இருவருக்கும் இடையேயான நட்பு எத்தகைய நெருக்கமானது என்பதை பலரும் அறிவோம். இப்போது விராட் கோலியை நன்கு புரிந்து கொண்டு தோனி பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற பத்தாம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஆர்சிபி அணி தனது அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.