வீடியோ: சோம்பேறித்தனத்தால் தோனியை கோபப்படுத்திய மொயின் அலி; 18ஆவது ஓவரில் நடந்த சம்பவத்தால் ஆல் அவுட் ஆவதிலிருந்து தப்பித்த ஆர்சிபி!

0
560

18ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஃபீல்டிங்கில் சற்று சோம்பேறித்தனமாக நடந்துகொண்ட மொயின் அலியின் செயலால் தோனி தனது அமைதியை இழந்து கோபமாக காணப்பட்டார். தோனியின் ரியாக்ஷன் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இப்போட்டி அதிக ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டியாக அமைந்துவிட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு டெவான் கான்வே 83 ரன்கள், சிவம் துபே 52 ரன்கள், ரகானே 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் வந்தது. சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் அடித்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த இலக்கை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்றாலும் சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் பறிபோனது மோசமான துவக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த மேக்ஸ்வெல், கேப்டன் டு பிளசிஸ் உடன் சேர்ந்து மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி சிஎஸ்கே பௌலர்களை வெளுத்துவாங்கி பௌண்டரி மற்றும் சிக்ஸர் மழைகளாக பொழிந்து வந்தது. இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தலைவலியாகவும் அமைந்தது. 36 பந்துகளில் 76 ரன்கள் அடித்திருந்த மேக்ஸ்வெல் விக்கெட்டை தூக்கினார் தீக்ஷனா.

- Advertisement -

நன்றாக விளையாடி வந்த கேப்டன் டு பிளசிஸ்(62) விக்கெட்டை சரியான நேரத்தில் மொயின் அலி தூக்கியதால் சிஎஸ்கே அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. அதன் பிறகு டெத் ஓவர்களில் பத்திரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவரும் நன்றாக வீசினார்

கடைசி நேரத்தில் உள்ளே வந்த பிரபுதேசாய் சிறிது ஆட்டம் காட்டி சிஎஸ்கே அணியை பதற வைத்தார். போட்டியின் 18 வது ஓவரின் கடைசி பந்தில் களத்தில் இருந்த பிரபுதேசாய் மற்றும் வெயின் பர்னல் இருவரும் மிட் விக்கெட் திசையில் அடித்து ரன் ஓடினர். அப்போது பீல்டிங் செய்த மொயின் அலி சோம்பேறித்தனமாக செயல்பட்டு ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தோனி மொயின் அலி பார்த்து எதுவும் திட்டவில்லை. ஆனால் அவர் கொடுத்த ரியாக்ஷன் அனைவருக்கும் புரிந்துவிட்டது. அதன் பிறகு அணியில் இருந்த அனைத்து வீரர்களும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கடைசியில் ஆர்சிபி அணியை 218 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணை 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.

மொயின் அலி செய்த தவறுக்கு தோனி கொடுத்த ரியாக்ஷன் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதன் வீடியோவை கீழே பார்ப்போம்.