வீடியோ: ஸ்டம்ப்பை பறக்கவிட்ட ஷமி.. கெத்துகாட்ட நினைத்து பரிதாபமாக வெளியேறிய நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன்!

0
4000

நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஜானேவின் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு விக்கெட் வீழ்த்தியுள்ளார் முகமது சமி. இந்த வீடியோவை கீழே பார்ப்போம்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆர்வத்துடன் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தார்.

- Advertisement -

“மைதானத்தின் பிட்ச்சில் ஆங்காங்கே புற்கள் காணப்பட்டது. ஆகையால் பந்து நன்றாக பேட்டிற்கு வரும் முதலில் பேட்டிங் செய்து நிறைய ஸ்கோர்களை முன்வைக்கலாம். பின்னர் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்கலாம்.” என்று டாஸ் போடப்பட்டபோது ஸ்மித் பேசினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவஜா இருவரும் களமிறங்கினார். கவாஜா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். ஹெட் அதே டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 76 ரன்கள் சேஸ் செய்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

நல்ல பார்மில் இருக்கும் இருவரும் களமிறங்கி இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்தது. பின்னர் உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் திட்டமிட்டு டிராவிஸ் ஹெட் விக்கெட் எடுத்தார். இவர் 32 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதன் பிறகு உள்ளே வந்த நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஜானே, மூன்று ரன்கள் அடித்திருந்தபோது, முகமது சமி வீசிய பந்தில் போல்டாகி ஆட்டம் இழந்தார். பேட்டிங் செய்ய ஏதுவான மைதானத்தில் இப்படி சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

தற்போது களத்தில் இருக்கும் கவாஜா மற்றும் ஸ்மித் இருவரும் நிதானத்தை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர். கவாஜா, 30 ரன்கள் கடந்து ஆடி வருகிறார். உணவு இடைவேளையின் போது 75 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

முகமதுசமியின் அபாரமான பந்துவீச்சில் கிளீன் போல்டாகிய மார்னஸ் லபுஜானேவின் வீடியோ: