ஜோஸ் பட்லரின் 207 பந்து போராட்டம் வீண் – பரிதாபமாக இழந்த விக்கெட்டின் வீடியோ இணைப்பு

0
3700
Jos Buttler Hit Wicket Ashes

இங்கிலாந்து அணிக்கு இந்த வருடம் டெஸ்ட் போட்டிகள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இந்திய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகளில் ( இந்திய மண்ணில் மூன்று போட்டிகள் மற்றும் இங்கிலாந்து மண்ணில் இரண்டு போட்டிகள் )தோல்வி அடைந்திருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.

6 போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை மேலும் பெற்று மோசமான நிலையில் உள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக 8 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்திருக்கிறது. இதுவரை ஒரு ஆண்டில் இங்கிலாந்து அணி இத்தனை போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை.

- Advertisement -

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இக்கட்டான நிலையில் சிக்கி தவிக்கும் இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் மோசமாக தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, தற்போது 2-வது டெஸ்ட் போட்டியிலும் மோசமாகவே தோல்வி அடைந்திருக்கிறது. போட்டியின் கடைசி நாளான இன்று அந்த அணி 10 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இன்று அந்த அணியில் ஜோஸ் பட்லர் மட்டும் சொல்லி கொள்ளும் அளவுக்கு விளையாடினார்.

206 பந்துகள் பிடித்து 26 ரன்களுடன் நீண்ட நேரம் போராடிய அவர், துரதிஷ்டவசமாக ஜய் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார்.193 ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர் இதுவரை ஒருமுறை கூட ஹிட் விக்கெட் முறைப்படி அவுட் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் மோசமான ரெக்கார்டை இங்கிலாந்து சமன் செய்யுமா ?

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து மிகவும் பின்தங்கிய நிலையில் தற்போது இங்கிலாந்து அணி இருக்கிறது. 3வது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26ம் தேதி தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி விடும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் இந்த ஒரு ஆண்டில் அந்த அணி அடையும் 9-வது தோல்வி அதுவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஒரு ஆண்டில் அதிக முறை தோல்வி அடைந்த அணி பங்களாதேஷ் மட்டுமே. அந்த அணி ஒரு ஆண்டில் 9 போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே இங்கிலாந்து அணி இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று மோசமான நிலையிலிருந்து தப்பிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.