கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை தற்பொழுது பரபரப்பாக நடைபெற்றுக் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 61 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 103 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
ஒரு பந்தில் 4 ரன்கள் ஓடிய ஜோஸ் பட்லர் மற்றும் படிக்கல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்த பொழுது, மூன்றாவது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை அவர் ஜோஸ் பட்லருக்கு எதிராக வீசினார். யார்க்கர் லைனில் வீசிய அந்த பந்தை ஜோஸ் பட்லர் மிக சாமர்த்தியமாக பேக்வார்டு பாயின்ட் பக்கம் அடித்தார். அந்த பந்து நேராக பவுண்டரிக்கு விரைந்தது.
ஆனால் அந்த பந்தை விடாமல் பின்னாலேயே ஓடி சென்று வெங்கடேஷ் ஐயர் மிக சாமர்த்தியமாக இறுதி நொடியில் தடுத்தார். பின்னர் அந்த பந்து விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சனிடம் வீசப்பட்டது. அந்த சில நொடிகளில் ஜோஸ் பட்லர் மற்றும் படிக்கல் மிக வேகமாக ஓடி 4 ரன்கள் சேர்த்தனர்.
குறிப்பாக பந்து கைக்கு வந்ததும் ஷெல்டன் ஜாக்சன் ஜோஸ் பட்லரை ரன் அவுட் செய்ய பார்த்தார். ஆனால் சாமர்த்தியமாக ஜோஸ் பட்லர் இறுதி நொடியில் டைவ் அடித்து தன்னுடைய நான்காவது ரன்னை வெற்றிகரமாக ஸ்கோர் செய்தார். ஒரு பந்தில் 4 ரன்கள் ஓடுவது என்பது மிக சவாலான விஷயம். அதை இன்றைய போட்டியில் ஜோஸ் பட்டிலர் மற்றும் படிக்கல் மிக அற்புதமாக நிறைவேற்றியுள்ளனர்.
#JosButtler #DevduttPadikkal ran four runs
— Raj (@Raj93465898) April 18, 2022
Incredible #IPL2022 #RRvsKKR pic.twitter.com/No9HK41HHM
இவர்கள் இருவரும் ஒன்றாக ஓடி 4 ரன்கள் சேர்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.