2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனின் 24-வது போட்டியாக, நேற்று மஹாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில், இரு வெற்றிகளைப் பெற்றிருந்த பஞ்சாப் அணியும், இதுவரை ஒரு வெற்றியும் பெறாத மும்பை அணியும் மோதின!
டாஸ் ஜெயித்த ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்வுசெய்ய, பஞ்சாப் ஓபனர்ஸ் தவான்-மயங்க் அதிரடியாய் அரைசதமடித்து அசத்த, இறுதியில் வந்த ஜிதேந்தர் சிங்கும் அதிரடி காட்ட, இருபது ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 198 ரன்களை குவித்தது. பின்பு 199 ரன்னை நோக்கி ஆடிய மும்பைக்கு ரோகித்-இஷான் ஏமாற்ற, பிரிவிஸ், திலக், சூர்யா அமர்க்களப்படுத்தினாலும் வெற்றியை எட்ட முடியவில்லை.
ஆட்ட முடிவுக்குப் பின்னர், அணியினர், அணி நிர்வாகத்தினர் கைக்குலுக்கிக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வின் போது, பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ் சச்சினின் காலில் விழப்போக, பதறியடித்த சச்சின் அவரைத் தடுத்து, கட்டியணைத்துக் கொண்டது வீடியோவாய் தற்போது வைரலாக ஆரம்பித்துள்ளது.
i missed this last night why is he like this😭 pic.twitter.com/AnlnoyZgOp
— m. (@idyyllliic) April 14, 2022
ஜான்டி ரோட்ஸ் முன்பு சச்சினின் மும்பை இந்தியன் அணியில் பீல்டிங் பயிற்சியாளராய் இருந்ததோடு, இந்தியாவின் மீதான ஈர்ப்பால், மதிப்பால், தன் மகளுக்கு இந்தியா என்று பெயரும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்க விசயம்!