பிக் பேஷ் லீகின் இறுதிப் போட்டியில் மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட பேட்டி அளித்த ஜய் ரிச்சர்ட்சன் – வீடியோ இணைப்பு

0
551
Jhye Richardson Interview With Bleeding Nose

2021-22ஆம் ஆண்டிற்கான பிக் பேஷ் லீக் தொடர் இன்று முடிவடைந்தது. இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லாரி எவான்ஸ் 76* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடத் தொடங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர் முழுவதுமாக நீடிக்காமல், 92 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது. பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் சார்பில் அன்ட்ரூ டை 3 விக்கெட்டுகளையும், ஜய் ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலமாக 71 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, 4ஆவது பிக் பேஷ் லீக் கோப்பையை பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிக் பேஷ் லீக் தொடரில் இவ்விரு அணிகளும் மொத்தமாக ஐந்து முறை இறுதிப் போட்டிகளில் பலப்பரிட்சை மேற்கொண்டுள்ளன. அதில் மூன்று முறை பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியும், இரண்டு முறை சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி பிக் பேஷ் லீக் தொடரில் அதிகபட்சமாக இவ்விரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை கைப்பற்றி இருந்தன. இன்று கூடுதலாக ஒரு கோப்பையை பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி கைப்பற்றியதன் மூலம், நான்கு முறை பிக் பேஷ் கோப்பையை வென்ற ஒரே அணி என்கிற பெருமையை பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி தட்டிச் சென்றுள்ளது.

இறுதி நேரத்தில் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு

சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கடைசி இரண்டு விக்கட்டுகளை மிக சிறப்பாக பந்துவீசி பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஜய் ரிச்சர்ட்சன் கைப்பற்றி அசத்தினார். பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த நொடியே, அந்த அணியின் சக வீரரான காலின் முன்றோ துள்ளிக் குதித்து வந்து ஜய் ரிச்சர்ட்சனை கட்டி அணைத்தார்.

- Advertisement -

அப்பொழுது தவறுதலாக அவரது தோள்பட்டை ஜய் ரிச்சர்ட்சனின் மூக்கில் பலமாக இடித்தது. அவரது தோள்பட்டை இடித்த அடுத்த நொடியே ஜய் ரிச்சர்ட்சனின் மூக்கில் இருந்து இரத்தம் நிற்காமல் வழிந்து ஓடியது. இதைக் கண்ட அந்த அணியின் சக வீரர்கள் அவருக்கு உடனடியாக ஒரு துணியை கொடுத்தனர்.

மறுப்பக்கம் ப்ராடு ஹாஜ் உடனடியாக விரைந்து ஜய் ரிச்சர்ட்சனிடம் பேட்டி எடுத்தார். ரத்தம் சொட்டிய படியே அவர் சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்தார்.”அணி வெற்றி பெற்றதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த அணி தனக்கு மிகவும் பிடித்த அணி என்றும் கூறினார். குறிப்பாக போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய லாரி எவான்ஸ்க்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார். ரத்தம் சொட்டிய படி அவர் பேட்டி கொடுத்து அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.