வீடியோ: அலெக்ஸ் கேரி ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட ஆண்டர்சன்! – 1100 விக்கெட்டுகள் கைப்பற்றி உலக சாதனை!

0
7664

முதல் டெஸ்டில் அலெக்ஸ் கேரி ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன், முதல்தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். அலெக்ஸ் கேரி விக்கெட்டின் விடியோவை கீழே காணலாம்.

- Advertisement -

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எச்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் அடித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

அதன்பின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, இரண்டாம் நாள் முடிவில் 311 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. களத்தில் கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் இருந்தனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப்பை நெருங்கி வந்தது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் பின்தங்கி இருந்தது. கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் தங்களது பார்ட்னர்ஷிப்பை 100 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்த ஜோடி 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தபோது அலெக்ஸ் கேரி விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் கிளீன் போல்ட் செய்து எடுத்தார். இவர் 66 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அலெக்ஸ் கேரி விக்கெட்டை எடுத்ததன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் ஆண்டர்சன் 1100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், 180 டெஸ்ட் போட்டிகளில் 686 விக்கெட்டுகளும், 194 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளும், 19 டி20 போட்டிகளில் 18 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். மீதம் இருக்கும் விக்கெட்டுகளை முதல்தர கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியைவிட ஏழு ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. நன்றாக விளையாடி வந்த கவாஜா 141 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தபோது போட்டியில் மழை வந்துவிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டிருக்கிறது.