ஆட்டமிழந்தப் பின்பும் மீண்டும் வந்து இரண்டாவது முறை பேட்டிங் செய்த ஜடேஜா & ஷ்ரேயாஸ் ஐயர் – வீடியோ இணைப்பு

0
868
Ravindra Jadeja and Shreyas Iyer

இந்திய அணி ஒரு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்தத் தொடரில் முதல் போட்டியா ஒரு டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 1 முதல் 5 வரை நடக்க இருக்கிறது!

இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து கவுன்டி அணியான லீசெஸ்டர்சையர் அணியோடு 23ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது. இந்தப்போட்டியில் எல்லா இந்திய வீரர்களும் பயிற்சி பெறும் வகையில், இந்திய வீரர்கள் எதிரணியிலும் இடம்பெறுமாறும், இரண்டு முறையும் பேட்டிங் செய்யுமாறும், இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தோம், லீசெஸ்டர்சையர் அணி நிர்வாகத்தோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது!

லீசெஸ்டர் கிரேஸ் சாலை மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி துவங்கிய இப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. எதிரணியில் இந்திய வீரர்கள் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரிஷாப் பண்ட், புஜாரா ஆகியோர் இடம்பெற்றனர். லீசெஸ்டர்சையர் அணியின் ரோமன் வால்கரின் சிறப்பான வேகப்பந்து வீச்சில் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிய, முதல் நாள் முடிவில் கே.எஸ்.பரத் அடித்த அரைசதத்தோடு 248 ரன்கள் சேர்த்த இந்திய அணி அத்தோடு தனது முதல் இன்னிங்ஸை டிரா செய்தது!

இரண்டாவது இன்னிங்சை ஆடிய லீசெஸ்டர்சையர் அணியில் புஜாராவை டக் அவுட் ஆக்கினார் மொகம்மத் ஷமி. ரிஷாப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியாக லீசெஸ்டர்சையர் 244 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சமி, ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளையும், சிராஜ், தாகூர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதையடுத்து இந்திய அணிக்கு துவக்கம் தர ரோகித் சர்மா கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவததால் அவருக்குப் பதிலாக கே.எஸ்.பரத் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். இருவரும் சுதாரித்து ஆடினாலும் அதற்கடுத்து வந்த ஹனுமா விகாரி, ஸ்ரேயாஷ், ஜடேஜா யாரும் சரியாக விளையாடாது ஆட்டமிழந்தார்கள்.

இந்த நிலையில் விராட்கோலி உள்ளே வந்து அரைசதமடித்து ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு பயிற்சிக்காக முன்பே ஆட்டமிழந்த ஸ்ரேயாஷ், ஜடேஜா ஆகியோருக்கு மறுவாய்ப்பு தரப்பட்டு இருவரும் மீண்டும் வந்து விளையாடினார்கள். இதேபோல் லீசெஸ்டர்சையர் அணிக்காக சமி பந்தில் டக் அவுட் ஆன புஜாரா இந்திய அணிக்காகவும் விளையாடினார். மூன்றாவது நாள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 364 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது!