சனிக்கிழமை இன்று டபுள் ஹெட்டர் நாளின் முதல் போட்டியில், ரோகித்தின் மும்பை அணியும், கே.எல்.ராகுலின் லக்னோ அணியும், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய, லக்னோ அணிக்குத் துவக்கம் தர வந்த குயின்டன் டிகாக், அடுத்த மனிஷ் பாண்டே, ஸ்டாய்னிஸ் போன்றவர்கள் கணிசமான ரன்களை அணிக்குத் தந்தார்கள்.
ஆனால் ஒருமுனையில் நின்ற கேப்டனும் ஓபனருமான கே.எல்.ராகுல் மும்பை அணியின் எல்லாப் பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்து அபாரமாகச் சதமடித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடக்கம். இருபது ஓவர்கள் முடிவில் லக்னோ 199 ரன்களை குவித்தது.
அடுத்து 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் ரோகித்-இஷானின் இந்தத் தொடரின் மோசமான ஆட்டம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. ரோகித்தை ஆவேஷ்கான் வெளியேற்ற, இஷானை ஆஸியின் ஸ்டாய்னிஸ் கிளீன் போல்டாக்கினார். இசான் கிசான் ஆட்டமிழந்து வெளியேறி போகையில் விரக்தியில் கோபத்தில் பவுண்டரி லைனில் பேட்டை ஓங்கி அடிக்க, பேட் கையிலிருந்து நழுவி பறந்து விழுந்தது!
Kishan cleaned up by Stoinis😔😔 pic.twitter.com/HV9BBkNuVp
— abhishek sandikar (@ASandikar) April 16, 2022