வீடியோ: 6, 6, 6 – ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த அக்ஸர்; 10 பந்தில் 6 சிக்ஸர்கள் விளாசிய அக்ஸர்-சூர்யா ஜோடி!

0
277

ஹசரங்கா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து இந்திய அணியின் கியரை மாற்றி நல்ல ஸ்கொரை எட்ட உதவிய அக்ஸர் பட்டேல். ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த வீடியோ இங்கே உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து பேரதிர்ச்சியை கொடுத்தனர். 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இந்திய அணியை படுதோல்வியிலிருந்து மீட்டனர். இதில் அக்சர் பட்டேல் முதலில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார்.

போட்டியின் 14வது ஓவரை இலங்கை அணியின் நட்சத்திர பவுலர் ஹசரங்கா வீசினார். அந்த ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் அடித்து இந்திய அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தார்.

அதே ஓவரில் சூரியகுமார் யாதவ் ஒரு சிக்சர் அடிக்க இந்திய அணி நிச்சயம் இலக்கு எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பலரும் நம்பினர். அதற்கு அடுத்த ஓவர்களிலும் அக்சர் பட்டேல்-சூர்யா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட இலக்கை எட்ட முயற்சித்தது.

இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தது. 16வது ஓவரில் சூரியகுமார் யாதவ் 51 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இறுதிவரை போராடிய அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 65 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால் 1-0 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி வருகிற ஏழாம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

அக்ஸர் பட்டேல் ஹாட்ரிக் சிக்ஸ் வீடியோ: