2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது கடினமான கேட்சை தொலை தூரம் ஓடி ஒற்றைக் கையில் பிடித்த லீவிஸ் ; ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டம் வீண் – வீடியோ இணைப்பு

0
1427
Evin Lewis one hand catch of Rinku Singh

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 66வது போட்டியாக, கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டிலில் நடந்த ஆட்டம் ஒரு ஹை-ஸ்கோரிங் திரில்லிங்காக அமைந்தது. இந்த ஐ.பி.எல் தொடரில் இது இரண்டாவது ஹை-ஸ்கோரிங் திரில்லர் என்று சொல்லலாம். அந்த முதல் ஆட்டத்திலும் கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியோடு மோதி இருந்தது.

முதலில் டாஸ் ஜெயித்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்து குயின்டன் டிகாக்கோடு களம் கண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆரம்பத்தில் பதுங்கி பவர்-ப்ளேவில் 44 ரன்கள் மட்டுமே சேர்த்தார்கள். ஆட்டம் எந்தவித சாய்வும் இல்லாமல் சமநிலையிலேயே இருந்தது.

- Advertisement -

அடுத்து 7-15 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 78 ரன்களை சேர்த்து, 15 ஓவரின் முடிவில் 122 ரன்களுக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் இதற்கடுத்த ஐந்து ஓவர்களில் இருவரும் சேர்ந்து, குறிப்பாய் குயின்டன் டிகாக் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்துவிட்டார். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 88 ரன்களை லக்னோவின் துவக்க ஜோடி நொறுக்கியது. குயின்டன் டிகாக் சதம், கே.எல்.ராகுல் அரைசமென, இருவரும் ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்தார்கள்.

பின்பு 211 என்ற இலக்கோடு ஆடிய கொல்கத்தா அணி ஆரம்பத்திலேயே வெங்கடேஷ் மற்றும் அபிஜித் தோமரை இழந்துவிட்டது. இதற்குப் பிறகு இணைந்த நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஜோடியும், சாம் பில்லிங்ஸ், ஸ்ரேயாஷ் ஜோடியும் கொல்கத்தா அணியை சரிவிலிருத்து மீட்டார்கள். ஆனால் இவர்களின் விக்கெட் விழ கொல்கத்தா அணி சிக்கலில் சிக்கியது. அதிரடி ரஸலும் ஏமாற்றினார்.

- Advertisement -

இந்த நிலையில் கடைசிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த ரிங்குசிங், சுனில் நரைன் ஜோடி மொத்த ஆட்டத்தையும் கொல்கத்தா பக்கம் திருப்பி விட்டது. கடைசி ஓவரில் 21 ரன்கள் கொல்கத்தா அணிக்குத் தேவைப்பட, ஸ்டாய்னிஸ் வீசிய அந்த ஓவரின் முதல் நான்கு பந்தில் 4, 6, 6, 2 என்று 18 ரன்களை கொண்டுவந்தார் ரிங்குசிங். கடைசி இரண்டு பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட, ஸ்டாய்னிஸ் ஆப்ஸைட் வீசிய கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை, ரிங்கி சிங் சீவ, அது டீப் பாயிண்ட் திசையில் காற்றில் பறந்தது, அப்போது பேக்வார்ட் பாயிண்ட் திசையில் நின்றிருந்த, கரீபிய வீரர் எவின் லீவிஸ் ஓடிவந்து, சரிந்து விழுந்து, ஒற்றைக் கையில் அதை கேட்ச் எடுத்து விக்கெட்டாக மாற்றினார். இதனால் இரண்டு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது லக்னோ அணி!

- Advertisement -