புஷ்பா திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜுன் நடனமாடுவது போல் நடனமாடிய டுவைன் பிராவோ – வீடியோ இணைப்பு

0
852
DJ Bravo dancing like Pusha Allu Arjun Srivalli Song

இந்த ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் தற்போது மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கோமில்லா விக்டோரியன்ஸ் மற்றும் பார்ச்சூன் பாரிஷால் மோதி வருகின்றன

டாஸ் வென்ற பார்ச்சூன் பாரிஷால் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் விளையாடிய கோமில்லா விக்டோரியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஓப்பனிங் வீரர் மஹமதுல் ஹசன் அதிகபட்சமாக 48 ரன்கள் குவித்தார். பார்ச்சூன் பாரிஷால் அணி சார்பாக அதிகபட்சமாக டுவைன் பிராவோ 4 ஓவர்கள் வீசிய 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பார்ச்சூன் பாரிஷால் மணி சேஸ் செய்து கொண்டு வருகிறது. அந்த அணியின் ஓபனிங் வீரர் சைகாத் அலி ஆட்டமிழக்க பின்னர் வந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெய்ல் 7 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணி தற்போது 11 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

அல்லு அர்ஜுன் போல் நடனமாடிய டுவைன் பிராவோ

கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த திரைப்படத்தின் பாடல்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்டது. நாளுக்கு நாள் புஷ்பா திரைப்படத்தின் பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வர, பொதுமக்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் உட்பட அந்த பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் மற்றும் கட்டர் வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் இன்று டுவைன் பிராவோ கோமில்லா விக்டோரியன்ஸ் அணி வீரரின் விக்கெட்டை கைப்பற்றிய அடுத்த நொடியே, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் ஸ்ரீவள்ளி பாடலில் நடனம் ஆடுவது போலவே நடனமாடினார்.

டுவைன் பிராவோ அல்லு அர்ஜுன் போல நடனம் ஆடிய அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.