வீடியோ: “பிளே-ஆப் போயிருவீங்களா? கோக்குமாக்காக கேள்வி கேட்ட டேனி மாரிஸன் – தக்லைப் பதில் கொடுத்த தல தோனி!

0
3739

ப்ளே-ஆப் சென்று விடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய வர்ணனையாளருக்கு தனது பாணியில் பதில் கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி. இதன் வீடியோ இணையதளத்தில் பரவலாக பார்க்க முடிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இன்னும் பிளே-ஆப் வாய்ப்பு உறுதியாகவில்லை.

- Advertisement -

தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி அணியுடன் விளையாடுகிறது. இதில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலிலும் இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியுற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கும் சிஎஸ்கே அணி தள்ளப்படும்.

ஆகையால் அந்த அளவிற்கு சிக்கலாக்கிக்கொள்ள மாட்டார்கள் என்று கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், இன்று மதியம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் டெல்லி கேப்டன் வார்னர் இருவரும் இன்று டாஸ் போடுவதற்கு உள்ளே வந்தனர்.

டாசை வென்ற தோனி, “முதலில் பேட்டிங்கை செய்கிறோம்.” என்று அறிவித்தார். அப்போது, வர்ணனையாளர் டேனி மாரிசன் தோனியை பார்த்து, “எளிமையான கணக்கு தான், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சென்றுவிடலாம். தகுதி பெற்று விடுவீர்கள் தானே? என்று தோனியிடம் கேட்டார்.

- Advertisement -

அதற்கு, “சீசன் ஆரம்பத்திலிருந்து வெற்றிக்காக தானே போராடி வருகிறோம்.” என்று சிரித்தபடியே தனது பாணியில் பதில் கூறினார் தோனி. இந்த பதிலை டேனி மாரிசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரும் சிரித்து நகர்ந்துவிட்டார்.

டாஸ் போடும்போது நடந்த இந்த நிகழ்வு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.