4 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகள் ; அறிமுக வீரர் போலந்து‌ அசத்தல் – அனைத்து விக்கெட்டுகளின் வீடியோ இணைப்பு

0
745
Scott Boland

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று வெகு சீக்கிரமாகவே நடந்து முடிந்துவிட்டது. நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணி, இன்று மூன்றாவது நாள் ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அபார தோல்வி அடைந்துள்ளது.

மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. இன்னும் இருக்கும் இரண்டு இதர போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி அடையுமா என்ற எதிர்பார்ப்பில் தற்பொழுது ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இறுதி நேரத்தில் அசத்திய போலந்து

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி பெற்றது என்று சொல்வதைவிட ஸ்காட் போலந்திடம் தோல்வி அடைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 4 ஓவர்களில் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை(ஜாக் லீச், ஹசப் ஹமீது, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஒல்லி ராபின்சன் மற்றும் மார்க் வுட் விக்கெட்டுகளை ) கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் இவர் வீசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெறும் 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றிய விதம் தற்பொழுது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இப்படியான ஒரு பந்து வீச்சை அவர் வெளிப்படுத்திய விதம் குறித்து தற்போது ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் வெகுவாக பேசி மற்றும் பாராட்டி வருகின்றனர்.

சிறப்பான பந்து வீச்சிற்கு பரிசாக போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. விருதை பெற்றதும் அவர், ” என்னுடைய ஹோம் கிரவுண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு ஊக்கம் அளித்த என்னுடைய பயிற்சியாளர்களுக்கும், எனது பெற்றோர்கள், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் எனது நன்றிகள்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -