வீடியோ: எங்க குத்தி எங்கடா போகுது பந்து.. திக்குமுக்காடி அவுட்டான புஜாரா; நம்ம ஊருல நமக்கே தண்ணிகாட்டிய ஆஸி., ஸ்பின்னர்ஸ்!

0
1695

பந்து மிகப்பெரிய டர்ன் ஆனதால் திக்குமுக்காடி ஆட்டமிழந்தார் புஜாரா. சுழலில் மிரட்டி அவுட்டாக்கிய நேதன் லயன், செய்த சம்பவத்தின் வீடியோ கீழே உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா, பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

- Advertisement -

பிட்ச்சில் வறட்சி அதிகமாக காணப்படுகிறது. இதனால் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல பந்துவீச்சில் டர்ன் அதிகமாக இருக்கும். ஆகையால் பேட்டிங் செய்ய முடிவை எடுப்பதாக ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

இந்திய அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. எதிர்பார்த்தபடி, கேஎல் ராகுல் வெளியில் அமர்த்தப்பட்டு ஷுப்மன் கில் உள்ளே எடுத்துவரப்பட்டார். அதேபோல் முகமது சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உமேஷ் யாதவ் உள்ளே எடுத்து வரப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய இந்திய அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களின் சூழலில் சிக்கி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க துவங்கினர்.

- Advertisement -

கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களுக்கு குன்னமென் பந்தில் ஆட்டம் இழந்தார். நன்றாக விளையாடி வந்த கில், 21 ரன்களுக்கு அதே குன்னமென் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர்கள் இருவரும் சுழல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்ததால் சுதாரித்து விளையாடிய புஜாரா, லயன் வீசிய பந்தில் திக்குமுக்காடி ஆட்டம் இழந்தார்.

பந்து எங்கேயோ வெளியே சென்று கொண்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்த புஜாரா, திடீரென ஸ்டம்பை நோக்கி பெரிய அளவில் டர்ன் ஆனதால், சற்று அதிர்ச்சியடைந்து எதிர்கொள்ள முடியாமல் போல்ட்டாகி வெளியேறினார்.

புஜாராவின் விக்கெட் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்திருக்கிறது. அதை நாம் கீழே காண்போம்.

அதன்பிறகு பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணிக்கு ஜடேஜா நான்கு ரன்கள் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் பறிபோனது.

நன்றாக விளையாடி வந்த விராட் கோலி 22 ரன்களும், கீப்பர் பரத் 17 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்கே தடுமாறி வருகிறது.

உணவு இடைவேளைக்கு முன்பு, ஏழு விக்கெட்டுகளை இழந்திருக்கும் இந்திய அணி 84 ரன்கள் அடித்திருக்கிறது. களத்தில் ஆல்ரவுண்டர்கள் அக்ஸர் பட்டேல் மற்றும் அஸ்வின் இருவரும் இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் குன்னமென் மற்றும் நேதன் லயன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும், டாட் மர்பி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர்.