பந்து ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழவில்லை ; அதிஷ்டவசமாக தப்பித்துக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் – வீடியோ இணைப்பு

0
307
Stokes escapes as Bails didn't fall

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்று போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் தற்போது 4-வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நான்காவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 137 ரன்கள் குவித்து அசத்தினார். இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர் மத்தியில் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் தடுமாறி வரும் இங்கிலாந்து அணி

பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடி தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் ஓபனிங் வீரர்கள் ஹமீது 6 ரன்னிலும், ஜாக் க்ராலி 11 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் கேப்டன் ஜோ ரூட் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து டேவிட் மலான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். 22 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.

பின்னர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இணைந்து நிதான ஆட்டம் ஆடத் தொடங்கினர். அவர்களின் நிதான ஆட்டம் காரணமாக தற்போது இங்கிலாந்து அணி 44 ஓவர் முடிவில் 134 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி வருகிறது. பென் ஸ்டோக்ஸ் 51* ரன்கள் மற்றும் ஜானி பேர்ஸ்டோ 45* ரன்கள் குவித்து தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்து அணியை தற்பொழுது 282 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்ட பென் ஸ்டோக்ஸ்

ஆட்டத்தில் 31ஆவது ஓவரின் முதல் பந்தை கேமரூன் கிரீன் பென் ஸ்டோக்ஸுக்கு எதிராக வீசினார். அப்பொழுது பென் ஸ்டோக்ஸ் 16 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். அவருக்கு ஆஃப் சைடாக வந்த அந்த பந்தை தனது பேட் மூலம் தடுக்காமல் அவர் தவிர்த்தார். ஆனால் திடீரென அந்த பந்து ஆஃப் ஸ்டம்பை லேசாக உரசி சென்றது.

ஆனால் களத்திலிருந்து நடுவர், பென் ஸ்டோக்ஸ் எல்பிடபிள்யூ மூலம் அவுட் ஆகி விட்டதாக எண்ணி அவருக்கு அவுட் முடிவை கொடுத்தார். அடுத்த நொடியே பென் ஸ்டோக்ஸ் ரிவ்யூ எடுத்தார். மூன்றாவது நடுவர் மீண்டும் அந்த காட்சியை மறு ஆய்வு செய்கையில், கிரீன் வீசிய அந்த பந்து ஸ்டம்ப்பை உரசிச் சென்ற காட்சி உறுதியானது.

ஸ்டம்ப் மீது உரசிய சத்தத்தை தவறாக கணித்து, களத்திலிருந்து நடுவர் பென் ஸ்டோக்ஸுக்கு அவுட் கொடுத்தது தெரியவந்தது. பின்னர் களத்திலிருந்து நடுவர் தனது முடிவை மாற்றி பென் ஸ்டோக்ஸுக்கு நாட் அவுட் முடிவை கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் ரிவ்யூ எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக இங்கிலாந்து அணி 5வது விக்கெட்டை இழந்து மேலும் தடுமாறி இருக்கும்.

ஆனால் எந்தவித யோசனையும் இன்றி பென் ஸ்டோக்ஸ் ரிவ்யூ எடுத்தது மிகச் சரியான முடிவாக அமைந்தது. கிரீன் வீசிய அந்த பந்து ஸ்டம்பை உரசி செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -