வீடியோ: செஞ்சுரி அடிக்கவேண்டிய அக்சர் பட்டேல்.. மிரட்டலான கேட்ச்சை எடுத்து ஸ்டேடியத்தை சைலண்ட் ஆகிய பேட் கம்மின்ஸ்!

0
1217

அபாரமாக ஆடிவந்த அக்ஸர் பட்டேலின் கேட்சை எடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்களை சைலண்ட் ஆக்கினார் பேட் கம்மின்ஸ். அரங்கையே மிரளவைத்த வீடியோ கீழே உள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் துவக்கத்தில் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 17 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 32 ரன்களுக்கு அவுட் ஆகினார்.

அடுத்து வந்த புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க இந்திய அணி திணறியது. முதல் போட்டியில் காயம் காரணமாக வெளியில் இருந்த ஷ்ரேயாஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இவர் நான்கு ரன்கள் அடித்திருந்த போது, ஸ்லிப்பில் நின்ற ஹேன்ஸ்கோம் வசம் பிடிபட்டு அவுட் ஆனார்.

- Advertisement -

முதல் 4 விக்கெட்டுகளையும் நெதன் லயன் எடுக்க, 66 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கும் மேல் எடுத்துச் சென்றனர்.

ஐந்தாவது விக்கெட்ருக்கு இந்த ஜோடி 59 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் இழந்தார். நன்றாக விளையாடி வந்த விராட் கோலியும் சர்ச்சையான எல்பிடபிள்யூ முறையில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆகினார்.

முதல் டெஸ்டில் சொதப்பிய கீப்பர் பரத், இந்த போட்டியிலும் ஆறு ரன்களுக்கு அவுட்டாக, 139 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆஸி., அணியை விட 124 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இந்திய அணியினை மிகப்பெரிய சரிவிலிருந்து மீட்டனர். அக்ஸர் பட்டேல் நன்றாக விளையாடி அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் பக்கன்பலமாக தடுப்பாட்டம் விளையாடி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களுக்கு பேட் கமெண்ட்ஸ் பந்தில் அவுட் ஆகினார். இருப்பினும் அக்ஸர் பட்டேல் தனது அதிரடியை நிறுத்தவில்லை.

கிட்டத்தட்ட ஆஸி., அணியின் ஸ்கோருக்கு நிகராக இந்திய அணியின் ஸ்கொரை எடுத்துச்சென்றபோது, அக்ஸர் பட்டேல் ஸ்பின்னர் மர்பி பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்தார். மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் எதிர்பாராதவாறு கேட்ச் எடுத்தார். இதை பிடித்ததும் அவராலேயே நம்ப முடியவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்ஸர் பட்டேல் சற்று சிரித்தபடியே பெவிலியன் திரும்பினார்.

இறுதியாக இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியை விட ஒரு ரன் பின் தங்கியிருந்தது. தொடர்ந்துஇரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் முடிவில் 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது. களத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் இருந்தனர்.

பேட் கமெண்ட்ஸ் பிடித்த மிகச்சிறப்பான கேட்ச் வீடியோ: