ஒற்றைக் கையில் தாவி கேட்ச் பிடித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் – வியந்து பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள்

0
131
Akeal Hssein

உலகக் கோப்பை டி20 தொடர் தற்போது அமீரகத்தில் உள்ள மைதானங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று தொடங்கிவிட்டது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன
எட்டு அணிகள் நேரடியாகவும் மீதி நான்கு அணிகள் தகுதி சுற்று விளையாடியும் தேர்வு செய்யப்பட்டன. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் கடந்த உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதின.

கடந்த தொடரில் நடந்த இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்து வெற்றி பெற்றது. அதற்கு பழிதீர்க்கும் வண்ணமுமாக இன்றைய ஆட்டம் அமைந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அந்த அணியின் மூத்த வீரர் கெயில் தவிர வேறு யாருமே இரட்டை இலக்க ரன்களை எட்ட முடியவில்லை. இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் மேற்கிந்திய தீவுகள் 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எதிராக அழியும் சூழல் வீரர்களுடன் மொயீன் அலி மற்றும் அடில் ரஷித் இருவரும் இணைந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

இங்கிலாந்து அணி இதை எளிதாக சேஸ் செய்யும் என்று ரசிகர்கள் பலரும் நினைத்தனர். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹொசைன் இங்கிலாந்து அணியின் வெற்றியை சிறிதுநேரம் தள்ளி வைத்தார். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக இலங்கை அணியின் நட்சத்திர வீரரான பேர்ஸ்டோவின் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் பலராலும் பெரிதாகப் பேசப்பட்டது. இடது பக்கம் தாவிச் சென்று ஒற்றைக் கையால் அவர் பிடித்த கேட்ச் தற்போது பெரிதாக ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.