வீடியோ: சிஎஸ்கேவுக்கு வந்தா மட்டும் எப்படி இவ்ளோ எனர்ஜி வருது… மேக்ஸ்வெல் சிக்ஸரை மரண மாஸ் ஃபீல்டிங் மூலம் தடுத்த ரகானே; இவருக்கு 35 வயதாக போகிறதாம்!

0
1908

போட்டியின் 9ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் அடித்த பந்து சிக்ஸருக்கு செல்வதற்கு முன், அசாத்தியமான ஃபீல்டிங் மூலம் தடுத்து பந்தை உள்ளே தூக்கிப்போட்டார் ரகானே. இவருக்கு அடுத்த மாதம் 35 வயதாகிறது. இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதன் விடியோவை கீழே பார்க்கலாம்.

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் ஐபிஎல் போட்டிகளில் மோதினாலே அதில் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சம் இருக்காது. அந்த பரபரப்பை மீண்டும் ஒரு முறை கொடுத்திருக்கிறது நேற்று நடந்து முடிந்த போட்டி.

- Advertisement -

சிக்ஸர் மற்றும் பௌண்டரி மழைகளாக பொழிந்த இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்திருக்கின்றன ஐபிஎல் வரலாற்றில் இது புதிய சாதனையாகவும் பதிவாகியுள்ளது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 14 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்கள் அடித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் அடித்துள்ளன. இதில் டெவான் கான்வெ ஆறு சிக்ஸர்களுடன் 83 ரன்களும், சிவம் துபே 5 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் அடித்திருந்தனர்.

அதன் பிறகு பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு மேக்ஸ்வெல் 8 சிக்ஸர்கள் அடித்து 76 ரன்களும் டு பிளசிஸ் 4 சிக்ஸர்கள் அடித்து 62 ரன்களும் அடித்துக்கொடுக்க, அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததால் ஆர்சிபி அணியால் இலக்கை எட்ட முடியாமல் 218 ரன்களில் முடித்தது. இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

- Advertisement -

போட்டியில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் செய்த சிறப்பான பீல்டிங் அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்தது. குறிப்பாக மேக்ஸ்வெல் அடித்த பந்தை சிக்ஸர் லைனில் நின்று கொண்டு சிறப்பாக பீல்டிங் செய்து கொடுத்த ரகானே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

rahane brilliant fielding

35 வயதாகும் ரஹானேவை வெறும் 50 லட்சம் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே அணி எடுத்தது. பேட்டிங்கில் மும்பை அணிக்கு எதிராக 63 ரன்கள், ஆர்சிபி அணிக்கு எதிராக 37 ரன்கள், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 35 ரன்கள் என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொடுத்தார்.

பீல்டிங்கிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். 50 லட்சம் கொடுத்து எடுத்ததற்கு ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் உழைக்கிறார் என்று பலரும் கமெண்ட் அடித்து வரும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை சிறப்பாக பீல்டிங் செய்த ரஹானேவின் வீடியோ கீழே உள்ளது.