வீடியோ: “கோலி.. கோலி” கத்தி நவீன் உல் ஹக்கை வெறுப்பேற்றிய சென்னை ரசிகர்கள் – கோலிய பகைச்சுகிட்டு நிம்மதியா ஊரு போய் சேரமுடியுமா?

0
883

ஏற்கனவே கோலி பெயரை கத்தி நவீன் உல் ஹக்கை ஹைதராபாத், கொல்கத்தா ரசிகர்கள் மைதானத்தில் வெறுப்பேற்றினர். இப்போது சென்னையில் ரசிகர்கள் அதை செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வருட ஐபிஎல் லீக் போட்டிகளில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன. அதில் குறிப்பிடத்தக்கவிதமாக, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியின்போது, விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே நடந்த வாக்குவாதம் போட்டி முடிந்தபின் சூடுபிடித்தது.

- Advertisement -

அதற்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி இடையே நடந்த வாக்குவாதம் மைதானத்தை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் நீடித்தது. இரண்டும் ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டது.

ஒருபடி மேலே சென்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக ஆர்சிபி ஆடும் போட்டிகளில் விராட் கோலியை கிண்டல் செய்து வந்தார். இந்தியா முழுவதும் விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

கிண்டலை ஏற்றுக்கொள்ளாத விராட் கோலி ரசிகர்கள், லக்னோ அணி விளையாடும் மைதானங்களில் நவீன் உல் ஹக் பீல்டிங் செய்யும் பகுதிக்கு சென்று “விராட் கோலி..விராட் கோலி” என்று கத்தி அவரை கோபப்படுத்தினர்.

- Advertisement -

நடுவில் விக்கெட்டுகள் எடுத்து கத்தியவர்களுக்கு சைகை மூலம் பதிலடி கொடுத்தார் நவீன் உல் ஹக். இதற்கு முன்னர் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் மைதானங்களில் இது நடைபெற்றது.

இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாடுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் முதலில் லக்னோ அணி பந்து வீசியது.

அப்போது மைதானத்தில் நின்று கொண்டிருந்த நவீன் உல் ஹக் இருக்கும் பகுதிக்கு சென்று ரசிகர்கள் பலர் மீண்டும் “விராத் கோலி.. விராட் கோலி” கத்தியுள்ளனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. கூடுதலாக நவீன் உல் ஹக் இந்த போட்டியில் நான்கு விக்கெடுகளை கைப்பற்றி பந்துவீச்சில் முக்கிய பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது.