வீடியோ: சிக்ஸ் அடிச்சு ஆரம்பிச்ச சூரியகுமார் யாதவை, வாயடைக்க வைத்த கேட்ச் – எய்டன் மார்க்ரம் அசத்தல்!

0
698

பேட்டிங்கில் சிக்ஸர் அடித்து ஆரம்பித்த சூரியகுமார் யாதவ்-ஐ அடுத்த பந்தே அபாரமான கேட்ச் எடுத்து மிரள வைத்திருக்கிறார் எய்டன் மார்க்ரம். சிறப்பான கேட்ச்சின் வீடியோவை கீழே பார்ப்போம்.

எய்டன் மார்க்ரம் அபாரமான கேட்ச்:

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா நன்றாக பேட்டிங் செய்து வந்தார். 18 பந்துகளில் 28 ரன்கள் அடித்து நடராஜன் பந்தில் ஆட்டம் இழந்தார் இவரது கேட்ச்சை மார்க்ரம் எடுத்தார்.

மற்றொரு துவக்க வீரர் இஷான் கிஷன் பவுண்டரிகளாக அடித்து வந்தார். இவரும் 38 ரன்கள் அடித்திருந்தபோது அவுட்டானார். அடுத்து உள்ளே வந்த சூரியகுமார் யாதவ். வந்த உடனேயே சிக்ஸர் அடித்து சிறப்பாக ஆரம்பிக்க, அடுத்த பந்தில் மார்க்ரம் எடுத்த அபாரமான கேட்ச்சால் மிரண்டு நடையை கட்டினார்.

போட்டி சுருக்கம்:

- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது. முதல் அரைசதம் அடித்த கேமரூன் கிரீன், 64 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனையடுத்து பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எவருமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லாததால், 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி, தொடர்ச்சியாக 3ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் – ஐபிஎல் 2023

ஹைதராபாத் அணிக்கு, மயங்க் அகர்வால் 48 ரன்கள், க்ளாசன் 36 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்ச ஸ்கொர்களாக இருந்தது.

மார்க்ரம் கேட்ச் வீடியோ: