ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாச படுத்தும் என்பதால் இரண்டு அணிகளுமே வெற்றியை நோக்கி விளையாடி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணிக்கு கோலி மற்றும் படிக்கல் துவக்கம் கொடுத்தனர். ஆனால் பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே படிக்கல் அவுட்டானார்.
அதன் பின்பு இணைந்த விராட் மற்றும் பரத் ஜோடி ஆட்டத்தை சிறப்பாக கையாண்டனர். பவுண்டரிகளும் சிக்சர்களுமாக ஆரம்பித்த விராட் கோலி தேவையான நேரத்தில் தேவையான ஷாட்டுகளை சிறப்பாக அடித்தார். பரத் அவுட் ஆனாலும் அதன் பிறகு இணைந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். மும்பை அணியின் பந்துவீச்சை எல்லா பக்கங்களிலும் சிதற அடித்த மேக்ஸ்வெல் அற்புதமாக அரைசதம் கடந்தார். கேப்டன் கோலியும் அரைசதம் கடந்து அவுட் ஆனார்.
சரியான நேரத்தில் களத்துக்குள் வந்தார் டிவிலியர்ஸ். கடைசி ஓவர்களில் எப்போதும் சிறப்பாக விளையாடும் டிவிலியர்ஸ் சரியான நேரத்தில் ஆட வந்ததால் நிச்சயம் பல பவுண்டரிகள் வரும் என பெங்களூரு அணி ரசிகர்கள் நினைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் வந்தது. இன்னமும் அதிகமாக வரும் என்று அவர்கள் நினைத்த போது 19வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டிவில்லியர்ஸ். ஷாட் பந்தை அடிக்க நினைத்த டிவிலியர்ஸ் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதனை மைதானத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த டிவிலியர்ஸின் மகன் மிகவும் கோபமாக கையை ஓங்கி குத்தினார். ஆனால் அது சற்று வேகமாக குத்தியதால் அந்த சிறுவனுக்கு வலியைக் கொடுத்தது. இதனால் மெதுவாக என்று கூறுவது போல தனது மகனை பார்த்தார் டிவில்லியர்ஸின் மனைவி.
So quite abd son pic.twitter.com/AjKOljJzEU
— hitupatel (@PatelHitz) September 26, 2021
இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். பெங்களூரு அணி வெற்றி பெற்று டிவிலியர்ஸின் சிறு வயதான மகனுக்கு ஆறுதல் அளிக்கும் என பெங்களூரு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.