தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு ஒரு குறிப்பிட்ட பிரச்சினை இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் விளையாடி உள்ள பும்ரா ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை என்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு தனிப்பட்ட ரீதியில் ஏதோ பிரச்சனை இருப்பது போல தோன்றுகிறது.
இதுதான் உண்மை காரணம்
இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்போது “நான் நேர்மையாகச் சொன்னால் பும்ரா 100% பிட்டாக இல்லை என்று நினைக்கிறேன். இது என் பார்வையும் நம்பிக்கையும்தான். தற்போது அவரது உடல் மொழியை பார்க்கும்போது டி20 உலகக் கோப்பையில் பார்த்தது போல இல்லை. அதனால் அவர் தனது சிறந்த நிலையில் இல்லை என்று நினைக்கிறேன்”
“ஏனென்றால் பும்ரா சாதாரணமாக இப்படியான லென்த்தை தவற விடமாட்டார். மேலும் இந்த அளவுக்கு அடிபடவும் மாட்டார். தொடர்ந்து ஐந்து போட்டிகளாக இப்படியே இருப்பார் என்று நினைக்கவும் முடியாது. எனவே முழுமையாக அவர் உடல் தகுதியுடன் இல்லை என்று நான் நினைக்கிறேன்”
இதைப் பார்க்க முடியவில்லை
“பும்ரா பந்துவீச்சில் இதற்கு முன்பு எப்பொழுதும் ஒரு தீவிரமும் சுறுசுறுப்பும் இருக்கும். ஆனால் தற்பொழுது அது சுத்தமாக அவரிடம் பார்க்க முடியவில்லை. அவரது பந்து வந்து பேட்டை தாக்கும் ஆனால் இப்பொழுது அப்படி இல்லை”
இதையும் படிங்க : பும்ராவுக்கு இந்த 2 விஷயங்கள் மட்டும் தான் பிரச்சனை.. இதை சரி செய்தால் விக்கெட்டுகள் தானா விழும் – இர்பான் பதான் அறிவுரை
“ஒரு வீரரின் ஃபார்ம் எப்பொழுதும் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருவர் எல்லா போட்டியிலும் விக்கெட் எடுப்பார் என்று நினைக்க முடியாது. இப்போது அவரைப் பார்க்கும் போது ஒரு மோசமான கட்டத்தை தாண்டி செல்வது போல தோன்றுகிறது” என்று கூறியிருக்கிறார்.






