பும்ராவுக்கு இந்த 2 விஷயங்கள் மட்டும் தான் பிரச்சனை.. இதை சரி செய்தால் விக்கெட்டுகள் தானா விழும் – இர்பான் பதான் அறிவுரை

0
60

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகள் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் முக்கிய பவுலர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறது. ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகள் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. எனது அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக இருக்கிறது.

மும்பை அணியின் முக்கிய பௌலராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா இதுவரை ஒரு விக்கெட் கூட எடுக்காமல் தடுமாறி வருவது அந்த அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியின் பிரைம் பவுலராக இருக்கும் பும்ரா மெதுவான பந்துகளை அதிகமாக வீசுகிறார் எனவும், அதிக வேகமுள்ள பந்துகளை வீசினால் அவருக்கு இந்த பிரச்சனைகள் சரியாகும் என்று இர்பான் பதான் கருதுகிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “பும்ரா விக்கெட்டுகள் வீழ்த்தாமல் இருப்பது தற்போது மும்பை அணிக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அவரால் அதிகமான வேகத்தில் பந்துகள் வீச முடிவதில்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளும் ஷார்ட் பிட்ச் பந்துகளாக அமைந்து விடுகின்றன. எனவே அவர் பந்தை சற்று முன்பாக மேலே தூக்கி வீச வேண்டும். அவருக்கு எந்த காயமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. அவர் தனது மெதுவான பந்துகளை இன்னும் சற்றும் மேலே தூக்கி வீச வேண்டும். மேலும் அதிக வேகத்தில் ஆன பந்துகளை அதிகமாக வீச வேண்டும் அப்படி வீசினால் அவருக்கு இந்த பிரச்சனைகள் சரியாகும்” என்று பேசி இருக்கிறார். மும்பை அணி தனது அடுத்த போட்டியில் இருந்து வெற்றி கணக்கை துவங்குமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -