சிஎஸ்கேவ ஜெயிச்சிருந்தாலும்.. ஸ்ரேயாஸ் கேப்டன்சி சரியில்ல.. இது பெரிய தப்பு – வாசிம் ஜாபர் விமர்சனம்

0
204
Shreyas

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர் சாகலுக்கு ஆரம்பத்தில் பந்து வீச வாய்ப்பு கொடுக்காதது குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாபர் மற்றும் பியூஸ் சாவ்லா இருவரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த போட்டியில் களத்தில் சிவம் துபே இருந்த காரணத்தினால் சாகலுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஓவர் கொடுக்கவில்லை. அவர் 17ஆவது ஓவரில் வெளியேறிய பிறகுதான் பதினெட்டாவது ஓவரில் சாகலுக்கு வந்து வீச வாய்ப்பு கொடுத்தார். 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவரை திறமை இருந்தும் பயன்படுத்தாதது கேள்வியை எழுப்பி இருக்கிறது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட்ட தந்திரம்

இதற்கு முன் சிஎஸ்கே டெல்லி அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் சிவம் துபே பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, அனுபவம் இல்லாத லெக் ஸ்பின்னர் விப்ராஜ் நிகமை கேப்டன் அக்ஸர் பந்து வீச வைத்தார். மேலும் அந்த நேரத்தில் அவர் சிவம் துபே விக்கெட்டை கைப்பற்றவும் செய்தார். அவர் வெளியேறியதுமே சிஎஸ்கே அணியின் வெற்றியும் அங்கேயே முடிவுக்கு வந்துவிட்டது.

இப்படியான நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் சாகலை பந்துவீச்சுக்கு கொண்டுவராமல் மிகவும் தாமதப்படுத்தினார். அனுபவமும் திறமையும் கொண்ட ஒருவரை சிவம் துபே போன்ற ஒருவருக்காக பந்து வீச வைக்காமல் இருந்தது தற்பொழுது விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. தற்போது சாகல் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்னால் இதை ஏற்க முடியாது

இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்பொழுது ” இதற்கு முந்தைய ஆட்டத்தில் விப்ராஜ் சிவம் துபேவை வெளியேற்றினார். ஆனால் நீங்கள் சாகலுக்கு பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை. அப்படி என்றால் நீங்கள் விப்ராஜை விட சாகல் திறமை குறைந்தவர் என்று சொல்கிறீர்களா? சிவம் துபே வரும்பொழுது ஆரம்பத்தில் பந்து வீசவைத்து விக்கெட்டை எடுத்து விட்டால், போட்டி அந்த இடத்திலேயே முடிவுக்கு வந்துவிடும். இதை ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று தவறவிட்டார்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : பிரியன்ஸ் ஆர்யாவுக்கு பயிற்சியே வேண்டாம்னு ஸ்ரேயாஸ் பாண்டிங் சொல்லிட்டாங்க.. அவர் ரோல் இதுதான் – கோச் பேட்டி

இது குறித்து இந்திய முன்னாள் ஸ்பின்னர் கூறும் பொழுது “இவருக்கு இவர் பந்து வீச முடியாது என்கின்ற மேட்ச் அப்கள் மிகவும் தவறானது. அப்படியெல்லாம் ஒன்று கிடையவே கிடையாது. சாகலை பொறுத்த வரையில் அவர் அதிக விக்கெட் எடுத்தவராக ஐபிஎல் தொடரில் இருக்கிறார். அவர் எப்பொழுதும் கடினமான சூழ்நிலைகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஒரு இடது கை பேட்ஸ்மேன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தாலும் அவரால் சிறப்பாக பந்துவீச முடியும். ஆரம்பத்தில் அவர் வீசி சிவம் துபே இரண்டு சிக்ஸர் அடித்தாலும், அவரால் அவரை வெளியேற்ற முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -