ஹாங்காங் அணியுடனான போட்டி சாதாரணமானது இல்லை – வாசிம் ஜாபர் புதிய கருத்து!

0
119
IndvsHk

15வது ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் உடன் வெற்றி பெற்று தனது அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது!

இன்னொரு பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இன்று தனது 2வது மற்றும் முதல் சுற்று கடைசி போட்டியில் ஆங்காங் அணியோடு மோதுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் தனது இரண்டாவது சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும்.

- Advertisement -

ஆங்காங் அணியுடனான இந்த ஆட்டம் ஏறக்குறைய ஒரு முடிவு தெரிந்த ஆட்டம் என்று இருக்கலாம். மிகப்பெரிய பவர் ஹவுஸான இந்திய அணி வெற்றி பெறவே இந்த ஆட்டத்தில் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இந்த ஆட்டத்தை இன்னொரு கோணத்தில் அணுகுகிறார்.

இன்று ஹாங்காங் அணியுடன் இந்திய அணி மோதும் போட்டி குறித்து வாசிம் ஜாபர் கூறும்பொழுது ” விராட் கோலி குறித்து நான் நம்புகிறேன். நாங்கள் அனைவருமே அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்சை எதிர்பார்க்கிறோம். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு அறுபது எழுபது ரன்கள் கொண்ட ஒரு இன்னிங்சை விளையாடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நான் அவரது சரளமான பேட்டிங்கை பார்க்க விரும்புகிறேன். 2016-17 காலகட்டத்தில் இப்படி சரளமாக விளையாடினார். ஒரு அறுபது எழுபது ரன்கள் போட்டி அமையும் பொழுது இந்த சரளமான பேட்டிங் அவரிடம் திரும்ப வந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணியுடன் மோதிய போட்டியை ஒப்பிடும்போது இந்த போட்டி எளிதான போட்டிதான். ஆனால் டி20 போட்டியில் எதுவும் நடக்கலாம் என்பதால் இந்தியா ஒரு மன நிறைவோடு இந்தப் போட்டியில் இருக்கக் கூடாது. இந்தியா இந்த ஆட்டத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாது என்று நான் நினைக்கிறேன். ஹாங்காங் அணி வெற்றியிலிருந்து வருகிறார்கள். இந்திய அணி தனது பாதுகாப்பை தொடரும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

இன்னும் சற்று விளக்கமாக பேசியவர் ” ஆங்காங் அணியுடன் இந்திய அணி அதிகம் விளையாடியது கிடையாது. கடைசியாக அவர்கள் இந்தியாவுடன் விளையாடிய பொழுது அது 50 ஓவர் வடிவத்தில் இருந்த போட்டி. அப்போது அவர்கள் முதல் விக்கெட்டுக்கு ஒரு 175 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்திய அணிக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்தார்கள். எனவே இந்தப் போட்டியை இந்தியா எளிதாக எடுத்துக் கொண்டு அணுகாது என்பது உறுதி” என்று தெரிவித்திருக்கிறார்!