தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் கேப்டன் ஆனதிலிருந்து சரியாக செயல்படாததாகவும், எதிர்காலத்தில் அவர் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வரும் எனவும் வாசிம் ஜாபர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
நாளை துவங்க இருக்கும் ஆசியக்கோப்பை தொடரை இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் விளையாடுகிறது. மேலும் துணை கேப்டனாக கில்லை கொண்டு வந்து இருப்பதின் மூலமாக சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்புக்கு அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஎல்-ல் திரும்பிய சூரியகுமார்
சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பு ஏற்றதில் இருந்து அவரிடம் இருந்து வழக்கமான ரன்கள் டி20 கிரிக்கெட்டில் வரவில்லை. அவர் சிறப்பாக விளையாடும் ஸ்பெஷல் ஷாட்டுகளில் தொடர்ந்து ஆட்டம் இழந்தார். இதனால் அவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமான முறையில் மாறியது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிடில் வரிசையில் வந்து 700 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்து, முதல் முறையாக மிடில் வரிசையில் 700 ரன்கள் எடுத்த வீரர் என்கின்ற சாதனையை ஐபிஎல் தொடரில் படைத்தார். எனவே ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரிய குமாருக்கு சிக்கல்
இதுகுறித்து வாசிம் ஜாபர் பேசும்பொழுது “சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்கும் பொழுது ரன்கள் எடுப்பது மிகவும் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது. அவர் கடைசியாக விளையாடிய சில சர்வதேச டி20 போட்டிகளில் ஸ்கொயர் லெக் பக்கமாக ரன்கள் அடிக்க விரும்பினார். ஆனால் அவருடைய ஷாட் செலக்சன் சரியானதாக இல்லை. ஆனால் அங்கிருந்து அவர் தனது பேட்டிங் பாணியில் உழைத்து ஐபிஎல் தொடரில் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்”
இதையும் படிங்க : டிராவிட் கிட்ட 2 பேர் இருந்தாங்க.. ஆனா கம்பீர் கிட்ட 2 பேரு தான் இருக்காங்க.. மாட்ட போறாரு – கைப் விமர்சனம்
“ஒவ்வொரு டி20 தொடரிலும் இந்திய அணிக்கு ஒவ்வொரு துணை கேப்டன் வருகிறார்கள். ஆனாலும் சூரியகுமார் கேப்டன் பதவிக்கு ஆபத்து இல்லை என்று தேர்வுக் குழு கூறிவிட்டது. அதே சமயத்தில் சில வீரர்கள் மற்ற தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியில் போய்விட்டு திரும்ப வருகிறார்கள். கில் மற்றும் ஹர்திக் பாண்டியா போன்றவர்களுக்கு இது நடக்கிறது. இதனால் சூரியகுமார் யாதவ் யாரை அணியில் சேர்ப்பது என கடினமான முடிவை எடுக்க வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.






