இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பையை வெல்வதற்கு தீட்டிய சிறப்பு திட்டத்தை கம்பீர் தவறவிட்டிருக்கிறார் என முகமது கைப் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வென்று இருந்தது. அதற்குப் பிறகு எந்த உலகக் கோப்பை தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. இதைத்தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது.
ராகுல் டிராவிட் சிறப்பு திட்டம்
2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் முழுவதுமே இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என மூன்று முழுமையான ஆல்ரவுண்டர்களை வைத்து விளையாடும் திட்டத்தை ராகுல் டிராவிட் கொண்டு வந்தார். இதன் மூலமாக பேட்டிங் வரிசையை 8 வரையில் நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அக்சர் படேல் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்ததால் அவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட வைக்க முடியவில்லை. அதே சமயத்தில் இந்த மூன்று ஆல் ரவுண்டர்கள் கூட்டணியை டி20 உலக கோப்பையில் விளையாட வைத்து கோப்பையையும் இந்திய அணியை ராகுல் டிராவிட் வெல்ல வைத்தார்.
கம்பீர் மிஸ் செய்வார்
இந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணியில் அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கிறார்கள். ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டதால், அவருடைய இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் கம்பீர் மற்றும் அகர்கர் அதை செய்யவில்லை.
இதையும் படிங்க: எனக்கு கில் தேவையில்ல.. கம்பீர் சாம்சனுக்கு வாய்ப்பு தரணும்.. முக்கிய காரணம் இதுதான் – ரவி சாஸ்திரி கருத்து
“இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது ” ஹர்திக், ஜடேஜா, அக்சர் என மூன்று ஆல்ரவுண்டர்களை வைத்து ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதாவது அவர்களிடம் முறையான ஆறு பவுலர்கள் அணியில் இருந்தார்கள். பேட்டிங் வரிசை 8 வரையில் இருந்தது. தற்போது ஆசிய கோப்பையில் ஹர்திக் மற்றும் அக்சர் என இரண்டு முறையான ஆல்ரவுண்டர் மட்டுமே இருக்கிறார்கள். தற்போது இந்தியா ஒரு புதிய வெற்றி கூட்டணியை கண்டுபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் கம்பீர் வாஷிங்டன் சுந்தரை தவறவிடுவார்” என்று கூறியிருக்கிறார்.






