கோலி கிடையாது.. நாக் அவுட்ல இந்த வீரர்தான் ஆர்சிபிய தனியா ஜெயிக்க வைக்க போறார் – வாசிம் அக்ரம் கணிப்பு

0
631
Akram

நடைபெற்றுக் கொண்டிருக்கும் 17வது சீசன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என யாருமே தொடரின் மத்தியில் நினைக்கவில்லை. வாசிம் அக்ரம் அப்பொழுது ஆர்சிபி தகுதி பெறாது எனக் கூறியிருந்தால். அந்த அணி தகுதி பெற்ற நிலையில் பிளே ஆப் சுற்று குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மோசமான தோல்விகளுக்காக ஆர்சிபி அணி மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதே சமயத்தில் தொடரின் மறுபாதியில் அவர்களின் சிறப்பான வெற்றிக்காக பாராட்டப்பட்டு கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கால் இறுதிப் போன்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடிய விதம் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. அவர்கள் ஒரு சாம்பியன் அணி போல விளையாடினார்கள். இறுதியாக சிஎஸ்கே அணி பிளே ஆப் வாய்ப்பில் இருந்து யாரும் எதிர்பார்க்காத அளவில் வெளியேறியது.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “மேக்ஸ்வெல் எப்பொழுதும் அதிக ரிவார்டு அதிக ரிஸ்க் கொண்ட வீரர். ஆர்சிபி அணிக்காக வருகின்ற நாக் அவுட் போட்டியில் அவர் தனி ஒரு வீரராக இருந்து போட்டியை வெற்றி பெற்று தரப் போகிறார். தற்பொழுது அவர் டிரெஸ்ஸிங் ரூமில் அமைதியாக இருக்க வேண்டும். அது வெறுப்பாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அவருக்கு வெறுப்பாகத்தான் இருக்கும்.

மேலும் ஆஸ்திரேலியார்கள் மற்றும் மேக்ஸ்வெல் எவ்வளவு போட்டித் தன்மை கொண்டவர்கள் என்பதும் எனக்கு தெரியும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தசைப்பிடிப்பின் காரணமாக நடக்க முடியாமல் விளையாடி ஒரு கையால் 200 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க வீரர்கள் ஐபிஎல் விட்டு போனது தப்பு கிடையாது.. பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கு – மைக்கேல் வாகன் பேச்சு

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்து நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தால் நீங்கள் சாதிக்க முடியாததையும் சாதிக்கலாம். நான் கூட ஆர்சிபி தகுதி பெற முடியாது என்று கூறியிருந்தேன். ஆனால்அவர்கள் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி தகுதி பெற்று இருக்கிறார்கள். இது ஆர்சிபிக்கு நம்ப முடியாத ஒரு கதை ஐபிஎல் வரலாற்றில் எழுதப்படும்” என்று கூறி இருக்கிறார்.