இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் காயம் அடைந்து வெளியேறினார். இருப்பினும் அவர் சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பும்ரா குறித்து சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான்
உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா முதன் முதலில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்கி விளையாடினார். அவரது திறமை ஐபிஎல் தொடரில் வெளியான பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அவர் மும்பை அணிக்காக விளையாடினாலும் குஜராத்தில் பிறந்த ஒரு பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவராவார். தனது அபார திறமையின் மூலமாக உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக தற்போது மாறி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் கேப்டனுமான வாசிம் அக்ரம் பும்ரா ஒரு பஞ்சாபி என்பதை சமீபத்தில்தான் அறிந்ததாக சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர்தான் தற்போதைய நம்பர் ஒன் பந்து வீச்சாளர் எனவும் அவரிடம் இருக்கும் ஸ்பெஷல் திறமை குறித்தும் சில முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த உண்மை எனக்கு இப்போது தான் தெரியும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா ஒரு பஞ்சாபி என்பது சமீபத்தில் தான் எனக்கு தெரிய வந்தது. அவரது பெயரில் எனக்கு முன்பு அதிக கவனம் இருந்ததில்லை. அவர் பெயர் பும்ரா அதனால் அவரை அப்படி அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். எங்கள் பையன் பஞ்சாபி இசையை அதிகமாக கேட்பான். அப்போதுதான் பும்ரா ஒரு பஞ்சாபி என்று எனக்குத் தெரிந்தது. தற்போதைய சகாப்தத்தில் அவர்தான் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர்.
இதையும் படிங்க:என்னையும் சச்சினையும் திட்டிட்டே இருப்பாரு.. எங்களுக்கு கோபம் வரப்போ அவர் இதைத்தான் சொன்னார் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
டி20 மற்றும் ஒரு நாள் அல்லது டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர் யார் என்று கேட்டால் பும்ராவை தான் கூற முடியும். அவரிடம் உள்ள முக்கியமான விஷயம் குறித்து கேட்டால் மக்கள் அவரது வேகத்தை கூறுவார்கள். அவருக்கு வேகம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதைவிட கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பேட்டர்களை எப்படி தந்திரமாக வெளியேற்றுவது, ஆட்டத்தின் சூழ்நிலை என்ன எந்த சூழ்நிலையில் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்து வீசுவது என்பது அவருக்கு தெரியும் அதை அவர் விரைவாக கற்றுக் கொண்டார் அதனால் தான் தற்போது சீராக இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.






