ஆசியக் கோப்பை டி20 தொடருக்கு பாகிஸ்தான் அணி எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பாகிஸ்தான் லெஜன்ட் வாசிம் அக்கரம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் யுனைடெட் அரபு எமிரேட்டில் எட்டு ஆசிய அணிகள் பங்கு பெறும் ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. ஒரே பிரிவில் இடம் பெற்றிருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
விழித்துக் கொண்ட பிசிபி
2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகச் சிறப்பானதாக காணப்பட்டது. அந்த ஆண்டு முதல் முறையாக ஒரு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. அந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கும், அதற்கு அடுத்த டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கும் பாகிஸ்தான் அணி முன்னேறியது.
இதற்குப் பிறகு வேகமாக டி20 கிரிக்கெட் அதிரடியாக மாறியது. இதற்கு பாகிஸ்தான் டி20 அணியால் ஈடு கொடுக்க முடியவில்லை. மிகக்குறிப்பாக நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரது பொறுமையான ஆட்டம் பாகிஸ்தான் டி20 அணிக்கு தோல்விகளை கொடுக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக தற்போது ஆசிய கோப்பை பாகிஸ்தான் டி20 அணியில் இருவரும் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதை செய்யுங்கள்
தற்போது பேட்டிங் யூனிட்டில் மூத்த வீரராக பகார் ஜமான் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்ற அனைவரும் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இருந்தபோதிலும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இளம் பாகிஸ்தான் அணி ஓரளவுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு பும்ரா அங்க எதையுமே செய்யல.. அவர் ஆடின விதம் பெரிய ஏமாற்றம் – இர்பான் பதான் விமர்சனம்
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது ” என்னைக் கேட்டால் தனிப்பட்ட முறையில் நான் பாபர் அசாமை பாகிஸ்தான் டி20 அணியில் ஆசியக் கோப்பை தொடரில் பார்க்க விரும்பினேன். ஆனால் அவரை தேர்வு செய்யவில்லை. எனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வீரர்கள் முன்னேறி செல்ல வேண்டும். அப்பொழுதுதான் தொடரை வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.






