இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தனது திறமைக்கு ஏற்ற வகையில் பூம்ரா விளையாடவில்லை என இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் வெளிப்படையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டில் தோல்வி அடைந்து ஒன்றை டிரா செய்தது. அவர் விளையாடாத இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. முகமது சிராஜ் இந்திய அணிக்கு ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் கடுமையான முறையில் உழைத்து இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
ரூட்டுக்கு அதை செய்யவில்லை
இந்த நிலையில் இர்பான் பதான் பும்ரா எந்த அளவுக்கு பொறுப்பை எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். மேலும் அணியின் முதல் நிலை பந்துவீச்சாளராக இருந்தும் அதற்கான பொறுப்பை எடுத்திருந்தால் இந்திய அணி இன்னும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து இர்பான் பதான் பேசும்பொழுது ” அந்த டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக ஆறாவது ஓவரை பும்ரா வீச வேண்டிய பல கட்டங்கள் இருந்தது. குறிப்பாக ஜோ ரூட் அவரிடம் 11 முறை ஆட்டமிழந்திருக்கிறார். அவர் களத்தில் இருந்த போது அப்படியான ஆறாவது ஓவரை வீச வேண்டிய தேவை இருந்தது. ஆனால் பும்ரா அந்த சூழ்நிலையில் தனது ஆறாவது ஓவரை வீசவில்லை. இது குறித்து நான் அப்பொழுதே பேசி இருந்தேன்”
பத்துக்கு ஆறுதான்
“நான் அவருக்கு பத்துக்கு ஆறு மதிப்பெண் மட்டுமே தருவேன். ஏனென்றால் ஒரு மூத்த வீரராக அவருக்கு நிறைய பொறுப்புகள் இருந்தது. ஆனால் அந்த பொறுப்புகளை அவர் சரியாக செய்யவில்லை. செய்திருந்தால் முடிவுகள் வேறு விதமாக இருந்திருக்கும்”
இதையும் படிங்க : அஸ்வின் ஐபிஎல்- ல் இருந்து ஓய்வு.. திடீரென ஓய்வு அறிவிப்புக்கு காரணம் என்ன? – வெளியான தகவல்கள்
“முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றினார். இதற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்சில் அவர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அந்த இடத்தில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது அவர் எதையும் செய்யவில்லை. அவர் இந்த தொடரில் பெரிய ஏமாற்றமாகவே இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.






