PSL-க்கு கூட்டமே இல்ல.. எனக்கு பயமா இருக்கு.. ஐபிஎல் மொத்தமா முடிச்சு விடப் போகுது – வாசிம் அக்ரம் வேதனை

0
439
Akram

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் டி20 லீக்கை 16 ஆண்டுகள் நடத்தி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் 17வது சீசன் நடைபெற இருக்கிறது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎல் தொடரின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. கடைசியாக நடைபெற்ற ஒளிபரப்பு உரிமத்தில் உலகச் சாதனை படைத்தது. இந்த வகையில் இரண்டாவது பெரிய விளையாட்டு தொடராக ஐபிஎல் அமைந்திருந்தது.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் தற்பொழுது மார்ச் ஒன்றாம் தேதி முதல் பாகிஸ்தானில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் டி20 லீக் ஒன்பதாவது சீசன் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி மார்ச் 18 ஆம் தேதி அதாவது நாளை கராச்சி நேஷனல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பு இந்த பிஎஸ்எல் சீசனில் கராச்சி மைதானத்தில் முதல் தகுதி சுற்று போட்டியில் பெசாவர் சல்மி மற்றும் முல்தான் சுல்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்று முல்தான் சுல்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

இதற்கு அடுத்து முதல் எலிமினேட்டர் போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி குவேட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வென்று, இரண்டாவது தகுதி சுற்றில் பெசாவர் சல்மி அணியுடன் இன்று மோத இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்து இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான் அணிக்கு எதிராக விளையாடும்.

தற்பொழுது பிஎஸ்எல் ஒன்பதாவது சீசனின் ப்ளே ஆப் சுற்றின் எல்லா போட்டிகளும் கராச்சி நேஷனல் மைதானத்தில் நடக்கின்றன. இது மட்டும் இல்லாமல் இறுதிப்போட்டியும் இதே மைதானத்தில் தான் நடக்க இருக்கிறது. இங்குதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு மிகப்பெரிய தலைவலி உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன் நடைபெற்ற இரண்டு பிளே ஆப் போட்டிகளுக்கும் கராச்சி மைதானத்தில் ரசிகர்களின் வருகையே இல்லை. ஒட்டுமொத்தமாக மைதானம் காலியாக இருந்தது. ப்ளே ஆப் மாதிரியான முக்கியமான கட்டத்திலேயே இந்த மாதிரி மைதானம் வெறிச்சோடி இருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அடுத்து இரண்டாவது தகுதிச்சுற்று மற்றும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நடக்க இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. எனவே இறுதிப் போட்டியை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசிப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆர்சிபி எல்லீஸ் பெரிக்கு நொறுங்கிய கண்ணாடி விருது.. பின்னணியில் சுவாராசிய காரணம்

இதுகுறித்து பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “முக்கிய போட்டியில் கராச்சியில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் இருந்தது அசிங்கமாக இருந்தது. நேற்று இரவு உண்மையில் மக்கள் கூட்டம் இல்லை. உண்மையில் இப்பொழுது பிஎஸ்எல் தடுமாற்றத்தில் இருக்கிறது. எனக்கு இது குறித்து பயமாக இருக்கிறது. உலகில் நடக்கும் பிற டி20 லீக்குகளில் நல்ல பணம் கொடுக்கப்படுகிறது. மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக, அதற்கு முன்பாக நடக்கும் பிஎஸ்எல் தொடரில் விளையாடாமல் ஓய்வெடுக்க சென்று விடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.