பாகிஸ்தான அணி தங்கள் சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வரலாற்று தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி செயல்பட்ட விதம் தன்னை வெட்கப்பட வைப்பதாக வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட பங்களாதேஷ் அணியிடம் தோற்றது கிடையாது என்கின்ற பெருமையில் இருந்து வந்தது. இந்த நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து தொடரையும் இழந்தது.
மாறிய பெருமை வரலாறு
பாகிஸ்தான அணி இப்படியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான தங்கள் பெருமை வரலாறை இழந்தவுடன், டெஸ்ட் தொடரையும் இழந்து வரலாற்று தோல்வியையும் பதிவு செய்து கொண்டது. மேலும் பாகிஸ்தான் அணி பெரிய அளவில் எந்த விதமான சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் கிரிக்கெட்டின் தரம் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 274 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 26 ரன்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் இங்கிருந்து பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் 262 ரன்கள் எடுக்க விட்டார்கள். இதன் காரணமாகவே இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்தார்கள், தொடரையும் இழந்தார்கள்.
உண்மையில் வெட்கப்படுகிறேன்
இதுகுறித்து பேசி இருக்கும் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய பின்னடைவு. முன்னாள் பாகிஸ்தான் வீரராகவும், முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும், மேலும் கிரிக்கெட்டை நேசிப்பவன் ஆகவும் பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்டில் நல்ல நிலையில் இருந்து தோல்வி அடைந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன். நாங்கள் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்தது எங்கள் கிரிக்கெட்டின் தரத்தைப் பற்றி நிறைய விஷயங்களை கூறுகிறது.
இதையும் படிங்க : ஓபனா சொன்னா.. ஜெய் ஷாக்கு ஜோ ரூட்ட இதனால பிடிக்காது.. இதுவும் நல்லதுக்குதான் – வாகன் கருத்து
எங்கள் கிரிக்கெட்டின் தரம் அடிபட்ட அளவில் சிறப்பாக இல்லை. இதனால் எங்களுக்கு ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது விளையாட முடியாமல் போனாலும் அவருக்கான சரியான வீரர் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு கிரிக்கெட் தேசமாக நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இங்கே இதுதான் மிகவும் முக்கியமானது. துரதிஷ்டவசமாக எங்களுக்கு விரைவான தீர்வுகள் எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.