ஓபனா சொன்னா.. ஜெய் ஷாக்கு ஜோ ரூட்ட இதனால பிடிக்காது.. இதுவும் நல்லதுக்குதான் – வாகன் கருத்து

0
27
Vaughan

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி அல்லது ஜோ ரூட் என்கின்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொண்ட இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வித்தியாசமான பதில் ஒன்றைக் கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் ஈர்க்கக்கூடிய தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலி மூன்று வடிவத்திலும் இருக்கிறார். இன்னொரு பக்கத்தில் இங்கிலாந்து ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் நினைக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை குவித்துக் கொண்டு வருகிறார். இதன் காரணமாக தற்பொழுது இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்கின்ற விவாதம் எழுந்திருக்கிறது.

- Advertisement -

ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து

இது குறித்தான கருத்தில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்டில் ஜோ ரூட்டை விட விராட் கோலியை ஆஸ்திரேலியாவில் மிகவும் சிறந்த வீரராக இருந்திருக்கிறார் என ஆடம் கில்கிறிஸ்ட் விராட் கோலியை தேர்வு செய்திருக்கிறார். மேலும் ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்தது இல்லை என்பதை சுட்டிக்காட்டவும் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் இதே கேள்வியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன இடம் வைக்கப்பட்ட பொழுது, வழக்கம்போல கேள்விக்கு நேரடியான பதிலை கூறாமல் சுற்றி வளைத்து வந்து ஒரு வித்தியாசமான பதிலை கூறி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அதில் பிசிசிஐயை உள்ளே இழுத்துப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பிசிசிஐ ஜோ ரூட்டை விரும்பாது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன் கூறும்பொழுது “ஜோ ரூட் வருகின்ற ஆசஸ் தொடரின் சிறப்பாக விளையாட முடியாவிட்டாலும் கூட, அவர் தொடர்ந்து சிறந்த பாமில் இருந்து சச்சின் அடித்துள்ள அதிக ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் கடக்கக் கூடியமுயற்சியில் இருப்பார். அது நடந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் பிசிசிஐ மற்றும் ஜெய் ஷா இந்த பட்டியலில் ஜோ ரூட் முதலிடத்தில் இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தரப்பில் ஒரு இந்தியர் இந்தப் பட்டியலில் மேல் இடத்தில் இருப்பதையே விரும்புவார்கள். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும். ஏனென்றால் ஜோ ரூட் சச்சினை கடந்தால், அதை ஒரு இந்தியர் கடக்க வேண்டும் என்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் ஆட சிறந்த பேட்ஸ்மேன்.. விராட் கோலியா ஜோ ரூட்டா? – கில்கிறிஸ்ட் ஓபன் பதில்

மேலும் ஜோ ரூட் ஒரு சிறப்பான வீரர். அதே சமயத்தில் அவர் விராட் கோலி அளவுக்கு பெரிய கவனத்தை ஈர்த்தவர் ஆக இல்லை. நீங்கள் விராட் கோலியை மூன்று வடிவத்திலும் சிறந்தவர் என்று வாதிடுவீர்கள். அவர் வெள்ளைப் பந்து வடிவத்தில் கொஞ்சம் ஜோ ரூட்டை விட முன்னால் இருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் ஜோ ரூட் பெரிய அளவில் சிறப்பாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -