பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு 2025-ல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது. இந்திய அணி எதற்காக பாகிஸ்தான் செல்வதில் பெரிய குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. தற்போது இது பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே தனிப்பட்ட முறையில் பல ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுவதில்லை. இரு அணிகளுமே ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பங்கு பெறுகின்றன. அதே சமயத்தில் இந்தியாவில் ஐசிசி தொடர்கள் நடந்தால் தவறாமல் பாகிஸ்தான் பங்கு வருகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வது கிடையாது.
இந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி வந்திருந்தது. டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியும் சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தான் செல்லும் என பரவலான பேச்சுகள் வந்தது. எனவே மீண்டும் இந்திய அணியை பாகிஸ்தானில் பார்க்கலாம் என ரசிகர்கள் நினைத்திருந்தார்கள். இந்த நிலையில்தான் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்திய அணி பாகிஸ்தான் வரும் என்று நான் நம்புகிறேன். எங்களுடைய மொத்த நாடும் எல்லா அணிகளும் வருவதற்காக காத்திருக்கிறது. இந்திய அணி பாகிஸ்தான் வந்தால் அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்படும். வசதிகள் சிறப்பாக இருக்கின்றன மேலும் புதிய மைதானங்கள் கட்டப்படுகிறது. லாகூர் கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் புதிய மைதானங்கள் கட்ட தலைவர் துவங்கி இருக்கிறார்.
இது சிறந்த தொடராக பாகிஸ்தான் அணிக்கு இருக்கும். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த தொடர் மிகவும் அவசியம். விளையாட்டும் அரசியலும் தனித்தனியே இருக்க வேண்டும் என்பதால் எல்லா அணிகளும் வந்து கலந்து கொண்டு விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : கம்பீர் vs ஜெயசூர்யா.. இந்தியா இலங்கை அணிகள் மோதும்.. 2 தொடருக்கு தேதி இடம் அறிவிப்பு.. புதிய ஆரம்பம்
இந்த காரணத்தினால் பாகிஸ்தானுக்கு எல்லா அணிகளுமே வரும் என்று நான் நம்புகிறேன். சிஸ்டம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கு மிகவும் வசதிகள் தயாராக இருக்கும். முன்பே சொன்னது போல மொத்த பாகிஸ்தானும் எல்லா அணிகளையும் எதிர்பார்த்து காத்து இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.