இந்திய கிரிக்கெட்

நேற்று அந்த பையன் மட்டும் டீம்ல இருந்து இருந்தா சும்மா ஜெயிக்க வச்சிருப்பான்.. அநியாயமா தூக்கிட்டாங்க – வாசிம் ஜாபர் கருத்து

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்ட ரிங்கு சிங் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவையே மாற்றியிருக்க முடியும் என இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வசீம் ஜாஃபர் பாராட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

​ஹைதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 248 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங் இடதுகை பேட்டராக லோயர் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால் அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

​மேலும் இந்திய அணியில் ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ள நமன் தீர் பந்துவீச்சில் 19 ரன்களை விட்டுக்கொடுத்ததுடன் பேட்டிங்கிலும் சோபிக்கத் தவறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் நமன் தீர் ஒரு சிறந்த பினிஷராக உருவெடுக்க முடியும் என்றும் அவர் பேட்டிங்கில் அதிரடி காட்டி அணியை காப்பாற்ற வாய்ப்புள்ளது என்றும் கருத்துக்கள் உலா வருகின்றன.

​இதுகுறித்து வசீம் ஜாஃபர் பேசும்போது “ஒரு பேட்டரின் கோணத்தில் இருந்து பார்த்தால் ரிங்கு சிங் மற்ற அனைவரையும் விட பல மைல்கள் முன்னிலையில் இருக்கிறார். அவர் 5 மற்றும் 6 ஆகிய பொசிஷன்களில் மிக அற்புதமாக பேட்டிங் செய்யக்கூடியவர் மற்றும் அவர் ஒரு லெப்ட் ஹாண்டர் ஆவார். அவரால் பந்துவீச முடியாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர் இந்த இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று நான் கருதுகிறேன். ரஜத் படிதார் விசியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஏனெனில் அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்கிறார் அங்கு தற்போது இடம் இல்லை ஆனால் ரிங்கு சிங் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “அந்தப் பொசிஷனில் உங்களிடம் ரிங்கு சிங் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அவர் கண்டிப்பாக கேமை மாற்றியிருக்கக்கூடும். பிரான்சைஸ் கிரிக்கெட்டில் இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து பல போட்டிகளை வென்று கொடுத்த திறமை அவருக்கு இருக்கிறது. அதேபோல வேரியேஷன் இல்லாத ஒரு ஆஃப் ஸ்பின்னர் பவர்பிளேவுக்குப் பிறகு இந்தியாவில் பந்துவீசுவது மிகவும் கடினம். அதனால் நமன் தீர் 4 ஓவர்கள் வீசுவார் என்று எதிர்பார்ப்பது மிக அதிகப்படியான எதிர்பார்ப்பு ஆகும்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -
Published by

Recent Posts