இந்திய கிரிக்கெட்

நான் ஏதாவது சொன்னால் இன்சமாம் வருத்தப்படுவார்.. அவர் மருமகன் செஞ்சது முட்டாள்தனம் – வாசிம் அக்ரம் கருத்து

இன்று இந்திய அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி வீரர் இமாம் உல் ஹக் ரன் அவுட் ஆனது குறித்து வாசிம் அக்ரம் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் எதிர்பாராத விதமாக காயமடைந்த காரணத்தினால் மாற்றுவீரராக இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் துவக்க வீரராக விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தேவையில்லாத ரன் அவுட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் களமிறங்கினார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து சிறப்பாக தொடங்கி திடீரென ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் வாய்ப்பு பெற்ற இமாம் உல் ஹக் குல்தீப் யாதவ் ஓவரில் தேவையில்லாமல் ரன் ஓடி அக்சர் படேலால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவர் 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் இவர் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்சமாம் வருத்தப்படுவார்

இன்றைய போட்டியில் அப்பொழுது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் “இப்படி ரன் அவுட் ஆவது அவர்களுடைய குடும்பத்தில் இருந்து வருகிறதா, என்று என்னிடம் கேட்டீர்கள். ஆனால் இமாம் ஓடும் பொழுது அங்கு ரன் ஏதும் கிடையாது. அவர் தேவை இல்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : திடீரென்று துபாய் வந்த பும்ரா.. இந்திய அணியுடன் பயிற்சியில் நின்றதால் ரசிகர்கள் குஷி.. என்ன நடந்தது?

இது குறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்த ரன் அவுட்டில் இம்சமாமை வைத்து பேசினால் அவர் வருத்தப்படுவார். முதலில் நான் சிறந்த ஓட்டப்பந்தய வீரன் கிடையாது. ஆனால் இமாம் ரன் எடுக்க செய்தது மிகவும் மோசமான முயற்சி. இதை அவர் செய்திருக்கத் தேவையில்லை. அவர் நன்றாக செட் ஆகியிருந்தார். இந்த நிலையில் அவர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -
Published by

Recent Posts