திடீரென்று துபாய் வந்த பும்ரா.. இந்திய அணியுடன் பயிற்சியில் நின்றதால் ரசிகர்கள் குஷி.. என்ன நடந்தது?

0
628

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் துபாயில் நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் அனைத்தும் இந்த போட்டியை எதிர்நோக்கி திரும்பியிருக்கிறது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஸ்டார் வீரரான பும்ரா காயம் காரணமாக இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பும்ராவுக்கு பதில் ஹர்ஷித் ரானா மாற்று வீரராக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

துபாய் வந்த பும்ரா:

பும்ரா இல்லாதது பங்களாதேஷ் எதிரான லீக் சுற்றின்  முதல் போட்டிகளில் ரசிகர்களால் உணரப்பட்டது. 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக வீழ்த்தியது. ஆனால் ஆறாவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் மேல் ஜோடி சேர்த்து வங்கதேச வீரர்கள் 220 ரன்களுக்கு மேல் சேர்த்தனர்.

இதனால் அந்த போட்டியில் இந்திய அணி கொஞ்சம் தடுமாறியே வெற்றி பெற்றது. பும்ரா இல்லாததால்தான் வங்கதேச அணி அவ்ளோ பெரிய ரன்களை அடித்ததாக ரசிகர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி பயிற்சி செய்து கொண்டிருந்த போது மைதானத்திற்குள் பும்ரா நுழைந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷியில் இருந்தனர். பும்ராவுக்கு காயம் சரியாகி விட்டதா? பும்ரா ஏன் இந்திய அணியின் பயிற்சியில் வந்திருந்தார் என பல கேள்விகள் கேட்கப்பட்ட இருந்தது.

- Advertisement -

காரணமே வேறு, ஏமாந்த ரசிகர்கள்:

ஆனால் பும்ரா காயம் இன்னும் சரியாகவில்லை என்றும் அவர் வேறு ஒரு காரணத்திற்காக தான் துபாய்க்கு வந்திருக்கிறார் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு பும்ரா  ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர், ஐசிசி சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் அணி, t20 அணியில் இடம் ஆகிய விருதுகளை வென்றார்.

இதையும் படிங்க: பாபர் அசாம்க்கு பை பை காட்டிய ஹர்திக்.. இந்தியாவுக்கு எதிராக தொடரும் சோகம்.. பாகிஸ்தான் தடுமாற்றம்

இந்த விருதுகளை வாங்குவதற்காக தான் பும்ரா தற்போது துபாய்க்கு வந்திருக்கிறார். இந்த விருது வாங்குவதற்கு முன்பு பும்ரா விராட் கோலி, ஹர்ஷித்ராணா உள்ளிட்ட வீரர்களிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது ஹர்ஷித் ரானாவிடம் சில அறிவுரை பும்ரா வழங்கியதாக தெரிகிறது. பும்ரா இல்லை என்றாலும் முதல் போட்டியில் ஹர்ஷித் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -