இந்திய கிரிக்கெட்

2027 உலக கோப்பையில் உலக தரமான இந்த பையன் இருக்கமாட்டான்.. ஆனா இவன் நிச்சயம் இருப்பான் – ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை

​வரும் 2027 உலகக்கப் தொடருக்கான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இடம் குறித்து தமக்கு 50-50 என்ற அளவிலேயே நம்பிக்கை இருப்பதாக இந்திய முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஆய்வாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான முதல் மூன்று போட்டிகளில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படாத நிலையில், 50 ஓவர் உலகக்கப் தொடரில் இந்திய அணி ஒரு பேட்டரை குறைவாக அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் கணித்துள்ளார்.

​ஹார்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் குறித்த கவலைகள் இருப்பதால், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை அணியில் தக்கவைக்க வாஷிங்டன் சுந்தரை வெளியில் அமர்த்த வேண்டிய சூழல் வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​தனது யூடியூப் சேனலில் 2027 உலகக்கப் அணி தேர்வு குறித்து பேசும்போது ஆகாஷ் சோப்ரா “யஷஸ்வி ஜெய்ஸ்வால் விஷயத்தில் எனக்கு 50-50 நம்பிக்கை தான் உள்ளது. இந்திய அணி வழக்கத்தை விட ஒரு பேட்டரைக் குறைவாக தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் தேர்வு குறித்து பேசும்போது “நீங்கள் நிதிஷ் குமார் ரெட்டியை அணியில் வைத்திருக்க வேண்டும் என்றால், ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டரான ஒருவரை வெளியில் வைக்க வேண்டி வரும். அது வாஷிங்டன் சுந்தராக இருக்கலாம். ஏனெனில் தொடர் தொடங்கும் போது தென் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் ஃபாஸ்ட் பௌலர்களுக்கு சாதகமான சூழலே இருக்கும். இரண்டு மாதங்கள் நடக்கும் இந்த நீண்ட தொடரின் இறுதியில் தான் ஸ்பின் பௌலிங் முக்கிய பங்கு வகிக்கும். ஹார்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் மீது சந்தேகங்கள் இருப்பதால் நிதிஷ் குமார் ரெட்டிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts