5 ஓவருக்கு 100 ரன் சட்டவிரோதமானது.. பவுலர்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வந்து அழிக்கிறாங்க – வாசிம் அக்ரம் பேட்டி

0
840
Akram

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரையில் 250 ரன்களுக்கும் மேலாக நான்கு முறை படிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் சிக்ஸர்கள் அடிக்கும் சராசரி விகிதமும் அதிகரித்திருக்கிறது. இந்த முறை பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து வாசிம் அக்ரம் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

டி20 கிரிக்கெட் வடிவம் எப்பொழுதும் பேட்ஸ்மேன்களுக்கானதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் இந்த முறை ஐபிஎல் தொடரில் இன்னும் மிக மோசமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் வழங்குவதில்லை. மேலும் இம்பேக்ட் பிளேயர் விதி முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களை சார்ந்து இருப்பது பந்துவீச்சாளர்களுக்கு பெரிய கடினமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறும் பொழுது “இந்த காலகட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாடாமல் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் 20 ஓவர்களில் தற்போது 270 ரன்கள் அடிக்கிறார்கள். இது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 450 அல்லது 500 ரன்களுக்கு சமமானது. இது ஏதாவது ஒரு முறை நடந்தால் பரவாயில்லை. இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமே நான்கு முறைக்கு மேல் நடந்திருக்கிறது. இது பேட்டிங் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை காட்டுகிறது.

ஐந்து ஓவரில் நூறு ரன்கள் எடுப்பது என்பது சட்டவிரோதம். இது எப்படி முடிகிறது? புல்டாஸ் வீசினாலும் இது மிகவும் கடினம். இந்த வடிவ கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு பணம் கொடுத்து கூட்டி வந்து அழிப்பது போல் இருக்கிறது.

ஹைதராபாத் அணி போல் மிகவும் அபாயகரமான பேட்டிங் யூனிட்டை எல்லா அணியாலும் உருவாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்ற ஒரு அணி உருவாக்கலாம். ஆனால் இப்படியான லீக் கிரிக்கெட்டில் இப்படியான அணி உருவாவது மிகவும் கடினம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி பாட் கம்மின்சை பார்த்து கத்துக்கனும்.. ஆனா விராட் கோலிய விட்ருங்க – நவ்ஜோத் சிங் சித்து பேட்டி

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் கிளாசன் மிகவும் முக்கியமானவர். அவரது சிக்ஸ் அடிக்கும் திறமை மிகவும் அபாரமானது. மேலும் அந்த அணிக்கு பினிஷர் ஆக அப்துல் சமாத் நன்றாக செயல்படுகிறார். கம்மின்ஸ் கேப்டனாக வந்ததால், அந்த அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமைதி காணப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்.