17 வருடங்களுக்கு பின் வாஷிங்டன் சுந்தர் செய்த சுவாரஸ்யமான சாதனை.. பின்னால் இருக்கும் கவலையான விஷயம்!

0
6363
Sundar

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்!

இந்திய அணியில் சில வீரர்கள் சொந்த காரணங்களுக்காக வீடு திரும்பி இருப்பதாலும், சில வீரர்களுக்கு உடல் நலம் இல்லாத காரணத்தாலும், நேற்று இந்திய அணிக்கு மொத்தம் 13 வீரர்கள்தான் இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இஷான் கிஷானும் சேர்த்து காய்ச்சலில் சிக்கிக்கொண்டார். இதன் காரணமாக அணியில் மொத்தம் நேற்று விளையாடிய வீரர்களோடு சேர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் 12 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.

ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் எடுக்கும் பொழுது துவக்க வீரர்களாக, கீழ் வரிசையில் இருக்கும் வீரர்களை கொண்டு வந்தால், உலகக் கோப்பைக்கு முன்பாக அவர்களது இடத்தை மாற்றியதாக தொந்தரவாக அமையும்.

எனவே நேற்று ரவிச்சந்திரன் அஸ்வினை வெளியில் வைத்து, விளையாடியே ஆகவேண்டிய கட்டாயத்தால் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லாத வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு தர வேண்டியதாக போய்விட்டது. எனவே வாஷிங்டன் சுந்தரை துவக்க வீரராக ஆட வைக்கவே, அணியில் வாய்ப்பு கொடுத்தார்கள்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் மொத்தம் பத்து ஓவர்கள் பந்து வீசி 47 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்தார். பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அதிரடி பேட்ஸ்மேன்களை இந்த அளவிற்கு அவர் கட்டுப்படுத்தியது மிகப்பெரிய விஷயம்.

மேலும் அவர் துவக்க வீரராக வந்து 30 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடக்கம். இதன் மூலமாக அவர் ஒரு சுவாரசியமான சாதனையை இந்திய அணியின் சார்பாக நிகழ்த்தி இருக்கிறார்.

இந்திய அணிக்கு பந்துவீச்சில் முழுமையாக பத்து ஓவர்கள் வீசியும், துவக்க வீரராகவும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் வந்து விளையாடி இருக்கிறார். இந்த லிஸ்டில் மனோஜ் பிரபாகர் 21 முறை செய்து முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 20 முறை செய்து இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் சேவாக், யுவராஜ், கங்குலி என ஏழு வீரர்கள் இந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

ஒரு போட்டியில் 10 ஓவர்கள் பந்து வீசும் அளவுக்கு திறமையோடு இருந்து, மேலும் துவக்க வீரராகவும் வரக்கூடிய வீரர்கள் முன்பு இருந்திருக்கிறார்கள். தற்போது இப்படியான பகுதி நேர பந்துவீச்சாளர்கள் யாரும் இந்திய அணியில் இல்லை என்பதை தான் இது காட்டுகிறது!