இந்திய கிரிக்கெட்

ரிங்கு சிங் பந்து வீசியது.. யார் எடுத்த முடிவு.. கம்பீரா சூர்யாவா? – சுந்தர் ரிங்கு சிங் விளக்கம்

இந்திய அணி நேற்று இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் வென்ற விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 19வது மற்றும் 20வது ஓவரை பகுதிநேர பந்துவீச்சாளர்கள் ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் இருவரும் வீசியதோடு அணியையும் வெற்றி பெற வைத்தார்கள். இந்த முடிவை எடுத்தது கேப்டன் சூரிய குமாரா இல்லை பயிற்சியாளர் கம்பீரா? என வாஷிங்டன் சுந்தர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு வேறு யார் கேப்டன்களாக இருந்தாலும் குறிப்பிட்ட அந்த ஓவரை ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் கைகளில் கொடுத்து இருக்க மாட்டார்கள். எனவே சிறப்புமிக்க இந்த முடிவை யார் எடுத்து இருப்பார்கள்? என்பது குறித்து ரசிகர்களுக்கு நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ரிங்கு சிங் 19வது ஓவரை வீசி 3 ரன்கள் கொடுத்ததுடன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். 20வது ஓவருக்கு சிராஜ் வருவார் என்பது போல சூழ்நிலைகள் தென்பட்ட நிலையில் கேப்டன் சூரியகுமார் பந்து வீச வந்தார். அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை சூரியகுமார் வீழ்த்தியதும், வெளியில் இருந்த பயிற்சியாளர் கம்பீர் ரிஷப் பண்ட் இடம் ஏதோ சொல்லி அனுப்பியது தொலைக்காட்சியில் காட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த முடிவை எடுத்தது யார்? என்று பேசி இருக்கும் வாஷிங்டன் சுந்தர் கூறும் பொழுது ” முதன் முதலில் ரிங்கு சிங்கை பந்து வீச கொண்டு வந்த சூரிய குமாரின் முடிவுதான் மிக மிக முக்கியமானது. மேலும் ரிங்கு சிங் வலைப்பயிற்சியில் சிறப்பாகவே பந்து வீசி இருந்தார்.இப்போது அதை களத்தில் அவர் காட்டி இருக்கிறார். மேலும் சூரியகுமார் மிகவும் கடினமான நேரத்தில் தானே பந்துவீசி தோற்கும் ஆட்டத்தை வெல்ல வைத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து 19வது ஓவரை வீசிய ரிங்கு சிங் கூறும் பொழுது “பந்து வீச தயாராக இருக்கும்படி சூரியகுமார் பாய் ஏற்கனவே கூறியிருந்தார். இதேபோல் நேற்று போட்டியின் போது நான் பந்து வீச வேண்டுமென அவர் என்னிடம் கூறினார். நான் போட்டிக்கு முன்பாக கொஞ்சம் வார்ம் அப் செய்தேன். ஆனால் போட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் பந்து வீசுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் சூர்யா பாய் என்னை பந்து வீச சொன்னார் நான் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பதிரனா இல்ல.. இப்ப கிரிக்கெட்ல எனக்கு ரொம்ப பிடிச்ச பவுலர்.. இந்த வீரர்தான் – தல தோனி தேர்வு

இது குறித்து இந்திய அணியின் தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகதுலே கூறும்பொழுது “சூர்யா செயல்படும் விதத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவதை குறைக்கவே முடியாது. சூர்யா எடுத்த மீண்டும் ஒரு சிறந்த முடிவு இது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by