இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனிக்கு என்று எப்பொழுதும் தனி இடம் இருக்கிறது. அது வீரராக, விக்கெட் கீப்பராக மற்றும் கேப்டனாக என்று தொடர்கிறது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என கூறி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முதல் அழுத்தமான புள்ளியை வைத்த கேப்டனான சவுரவ் கங்குலி தலைமையில் மகேந்திர சிங் தோனி முதன் முதலில் அறிமுகமானார். அவருடைய காலகட்டத்தில் சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமணன் ஆரம்பித்து சேவாக், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன்சிங் என எல்லோரும் திறமையாளர்களாகவும் நட்சத்திரங்களாகவும் இருந்தார்கள்.
இப்படியான பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தனக்கான ஒரு இடத்தை தனித்துவமான கிரிக்கெட் மூளையால் பிடித்தார். அவருடைய பேட்டிங் ஸ்டைல், விக்கெட் கீப்பிங் ஸ்டைல் மட்டும் இல்லாமல் அவருடைய தோற்றம் கூட மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தது.
மேலும் 24 வருடங்களாக இந்தியாவிற்கு இருந்த கிரிக்கெட் உலகக் கோப்பை வறட்சியை 2007 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்த கேப்டனாக அவர் மாறிய பொழுது, இந்திய கிரிக்கெட்டில் யாருக்கும் இல்லாத இடம் அவருக்கு கிடைத்தது. மேலும் 2011 ஆம் ஆண்டு சொந்த நாட்டில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றிய பொழுது அவருடைய உயரம் பெரிதாக மாறியது.
இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திர சிங் தோனியிடம் தற்போதைய பந்துவீச்சாளர்களில் யாரை மிகவும் பிடிக்கும் என கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மகேந்திர சிங் தோனி ” தற்போதைய காலகட்டத்தில் பிடித்த பவுலர் என்றால் எனக்கு அது இந்திய அணியின் பும்ராதான்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ரோகித் ODI தொடர்ல.. உங்ககிட்ட அதை நிறைய எதிர்பார்க்கிறேன்.. டிவி முன்னாடியே இருப்பேன் – சூரியகுமார் யாதவ் விருப்பம்
உலகக் கிரிக்கெட்டில் தற்போது பந்துவீச்சில் பும்ராவின் திறனை எட்டிப் பிடிக்கக் கூடியவர்களாக யாருமே இல்லை. மேலும் இதுவரையில் உலகக் கிரிக்கெட்டில் வந்த சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் பும்ரா தனக்கான இடத்தை விளையாடிக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே பிடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பும்ராவை தேசிய சொத்தாக அறிவிப்பதற்கு தான் தயார் என விராட் கோலி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.






