இந்திய கிரிக்கெட்

கம்பீர் கிடையாது.. இந்த இந்திய முன்னாள் வீரர் தான் என் பேட்டிங் சிறப்பாக காரணம் – வாஷிங்டன் சுந்தர் பேச்சு

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான முறையில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்தார். இந்த நிலையில் தன்னுடைய பேட்டிங் முன்பை விட சிறப்பாக காரணமாக இருந்தது யார்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி அவர் அடித்த அரை சதம் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. நிலையில் தற்போது அவருடைய பவர் ஹிட்டிங் மேம்பட்டு இருக்கிறது. இது குறித்தும் கூறியிருக்கிறார்.

டி20 அணியில் இடமில்லை

வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் சிறப்பான முறையில் இருந்தாலும் கூட டி20 கிரிக்கெட்டில் கீழ் வரிசையில் அவரை விளையாட வைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. காரணம் அவரால் அதிரடியாக பெரிய ஷாட் விளையாட முடியாது, கடைசி நேரத்தில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து போட்டியை முடிக்க முடியாது என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது. மேலும் இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருடைய பேட்டிங் சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும், தேவைப்படும் பொழுது அதிரடியாகவும் இருந்தது. முன்பை விட பெரிய ஷாட் விளையாடுவதில் அவர் திறமையானவராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

இவர்தான் முக்கியமான காரணம்

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் பேசும்பொழுது ” ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆசிஸ் நெக்ராவுடன் நான் இருந்தேன். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் பேட்டிங் பயிற்சி செய்த அளவுக்கு, என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் செய்தது கிடையாது. எனக்கு அவர் அவ்வளவு நேரம் பேட்டிங் பயிற்சி தனிப்பட்ட முறையில் கொடுத்தார். அதுதான் எனக்கு இங்கிலாந்து தொடரில் மிகப்பெரிய உதவியாக இருந்தது”

இதையும் படிங்க : நாங்க இன்னும் ஒரிஜினல் பேட்டிங் ஆடல.. இந்த 2 பேரே முடிச்சிடுவாங்க – இந்திய அணிக்கு பாக் கேப்டன் எச்சரிக்கை

“இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட் வந்த பொழுது நான் அதிரடியாக விளையாட வேண்டி இருந்தது. அப்போது நான் ஐபிஎல் தொடரில் செய்த பவர் ஹிட்டிங் பயிற்சி எனக்கு பெரிய அளவில் உதவியது. அந்த அணியில் இருந்த தயாரிப்பு கலாச்சாரம் என் பேட்டிங்கை பெரிய அளவில் மாற்றி இருக்கிறது. எனக்கு அந்த அணிகள் இருந்தது சூப்பரான ஒரு தருணமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts