நாங்க இன்னும் ஒரிஜினல் பேட்டிங் ஆடல.. இந்த 2 பேரே முடிச்சிடுவாங்க – இந்திய அணிக்கு பாக் கேப்டன் எச்சரிக்கை

0
356
Salman

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ அணைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

இந்த போட்டியின் முடிவுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி விதமான சவால்களுக்கும் தயாராக இருப்பதாகவும், மேலும் தாங்கள் இன்னும் தங்களுடைய சீரியஸான பேட்டிங் செயல் திறனை வெளிப்படுத்தவில்லை எனவும் எதிரணிகளுக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தானின் மிடில் வரிசை

தற்போது பாகிஸ்தான் பேட்டிங் யூனிட்டில் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருக்கிறது. மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சு வரும் பொழுது சமாளித்து விளையாடிய ரன்கள் எடுக்க அவர்களால் முடிவதில்லை. இதன் காரணமாக அவர்கள் சிறிய அணிகளுக்கு எதிராகவும் 150 ரன்கள் மட்டுமே எடுக்கிறார்கள்.

அதே சமயத்தில் மூன்று போட்டிகளாக தொடர்ந்து டக் அவுட் ஆகி வந்திருக்கும் துவக்க ஆட்டக்காரர் சைம் அயூப் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி நடப்பு ஆசிய கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக இருக்கிறார். அவருடைய திடீர் சிறப்பான பேட்டிங் செயல்பாடு பாகிஸ்தான் அணியை காப்பாற்றி வருகிறது.

- Advertisement -

நாங்கள் இன்னும் வெளிப்படுத்தவில்லை

இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா பேசும்பொழுது ” நாங்கள் எந்த ஒரு சவாலுக்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் கடந்த நான்கு மாதங்களாக விளையாடிய விதத்தில் தொடர்ந்து விளையாடினால் யாரையும் வீழ்த்துவோம். ஆனால் நாங்கள் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் இதைத் தாண்டி நாங்கள் சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறோம். அதே சமயத்தில் எங்களுடைய சீரியஸான பேட்டிங்கை இன்னும் நாங்கள் வெளிப்படுத்தவில்லை”

இதையும் படிங்க : இந்தியா மேட்ச் பிக்சிங் செய்ய நிரந்தர அம்பயரை வச்சிருக்கு.. 90 மேட்ச்ல கண்கூடா பாத்தாச்சு – ரமீஷ் ராஜா குற்றச்சாட்டு

“இதன் காரணமாக நாங்கள் 150 ரன்கள் எடுக்கிறோம். ஆனால் நாங்கள் சரியாக விளையாடினால் 170 ரன்னுக்கு சுலபமாக சென்று விடுவோம். ஷாகின் பேட்டிங் சிறப்பான முறையில் மாறி இருக்கிறது. அவர் ஏற்கனவே சிறந்த பவுலர். அதேபோல சைம் அயூப் பந்து வீச்சில் இதே போல தொடர்ந்து சிறப்பாக இருப்பார் என நினைக்கிறேன். இவர்கள் தொடர்ந்தால் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்துவோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -