அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் 2024 கிரிக்கெட் தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி சியாட்டில் ஆர்காஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மினி அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் தற்போது புள்ளி பட்டியலில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியில் டல்லாஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வாஷிங்டன் பிரீடம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய சியாட்டில் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.அந்த அணியின் கேப்டன் கிளாசன் அதிகபட்சமாக 30 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 51 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு நட்சத்திர பேட்ஸ்மேன் டீ காக் 24 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் அணியில் சிறப்பாக பந்து வீசிய நெட்ரவால்கர் 3.4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் லாக்கி பெர்குசன் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹாலண்ட் மற்றும் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் தரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி வாஷிங்டன் ஃப்ரீடம் அணி களம் இறங்கியது. டிராவீஸ் ஹெட் ஜிரோ ரன்னிலும், ஸ்மித் 12 ரன்னிலும் வெளியேற, அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 26 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய லஹிரு மிலன்தா 33 ரன்களும் பினார் 31 ரன் mகளும்குவித்து வாஷிங்டன் வெற்றியை உறுதி செய்தனர்.
சியாட்டில் அணித்தரப்பில் பர்கர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 18.2 ஓவரில் வாஷிங்டன் அணி 127 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் அணியின் லாக்கி பெர்குசன் நான்கு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:பணத்தால வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மாறிடுமா.. காலை 5:30 மணிக்கு காத்திருந்த ஆட்கள் எங்க? – பிரையன் லாரா வருத்தம்
இதன்மூலம் இரண்டாவது வெற்றியை பெற்றதோடு வாஷிங்டன் அணி புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே முதல் இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மினி அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி டிரா என தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வாஷிங்டன் அணி 5 புள்ளிகளிலும் டெக்ஸாஸ் அணி மூன்று புள்ளிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.