“நான் சொன்னது தப்பா?.. முடிஞ்சா இந்த இந்திய வீரர் நிரூபிக்கட்டும்!” – கொளுத்தி போட்ட கவாஸ்கர்!

0
124
Gavaskar

கிரிக்கெட் உலகில் வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகம் இருக்கும் என்கின்ற காரணத்தினால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் எந்த பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள்? என்கின்ற எதிர்பார்ப்புகள் மிக அதிகம் இருக்கிறது.

- Advertisement -

இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியில் முதல் இரண்டு பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் சிராஜ் இருப்பார்கள் என்பது உறுதி. மேலும் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக பேட்டிங் செய்யக்கூடிய சர்துல் தாக்கூர் வருவார். அவர் 2021 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் பந்து வீசிய அனுபவம் கொண்டவர்.

தற்பொழுது கேள்விக்குரிய ஒரு விஷயமாக இருப்பது இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார்? என்பதுதான். இந்த இடத்திற்கு சரியான இடங்களில் பந்து வீசி, பந்தை இருபுறமும் திருப்பக்கூடிய முகேஷ் குமார், தன் உயரத்தின் காரணமாக தென் ஆப்பிரிக்காவின் ஆடுகளங்களில் அதிக பவுன்ஸ் எடுக்கக்கூடிய பிரசித் கிருஷ்ணா இருவரும் இருக்கிறார்கள். இருவரில் ஒருவரை தேர்வு செய்வது உண்மையில் கடினம்தான்.

இதுகுறித்து பேசி உள்ள கவாஸ்கர் கூறும் பொழுது “பிரசித் கிருஷ்ணாவை பற்றி எனக்கு மிக உறுதியாக எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் அவர் காயத்தில் இருந்து சமீபத்தில்தான் திரும்பி வந்திருக்கிறார். அவர் 15 முதல் 20 ஓவர்கள் ஒரு நாளில் வீச வேண்டுமென்றால், அவரால் அதைச் செய்ய முடியுமா? என்று தெரியவில்லை.

- Advertisement -

நான் சொல்வதை அவர் தவறு என்று நிரூபித்தால் நான் அதில் பெரும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் அப்படி நடந்தால் இந்திய அணி பலமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்திய அணி அப்படி இருந்தால் எனக்கு சந்தோசம்தான்.

பும்ரா, சிராஜ் இருவரும் தேர்வாவது பற்றி எந்த சந்தேகமும் கிடையாது. மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான தேர்வு என்பது, நீங்கள் எப்படிப்பட்ட ஆடுகளத்தை போட்டியில் பார்க்கிறீர்களோ, அதைப் பொறுத்து தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எனது தேர்வு முகேஷ் குமார்தான். அவர் பந்தை நன்றாக நகர்த்தி சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசக்கூடியவர்.

மேலும் அவர் நிறைய ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கின்ற காரணத்தினால், அவருக்கு நிறைய ஓவர்கள் வீசிய அனுபவம் இருக்கிறது. நீங்கள் நாள் முழுவதும் பந்து வீசினால் 18 முதல் 20 ஓவர்கள் வீச தயாராக இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!